KKR vs SRH Final LIVE Score: மூன்றாவது கோப்பையை வென்ற கொல்கத்தா; மொத்தமாக முடங்கிய ஹைதராபாத்!
KKR vs SRH IPL Final 2024 LIVE Score: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 17வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியின் லைவ் அப்டேட்களை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பெற்று தனது அணி வீரர்களிடம் வழங்கினார்.
கொல்கத்தா அணி வெற்றி பெற்ற பின்னர் அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் அணியின் மெண்ட்டாரான கம்பீருக்கு அன்பு முத்தம் கொடுத்தார்.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா வெற்றி - ஒரு வழியாக சிரித்த கம்பீர்
வருண் சக்ரவர்த்தி இந்த சீசனில் சிறப்பாக விளையாடி 21 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் வெற்றி இலக்கான 114 ரன்களை எட்டி, கோப்பையை வென்றது.
10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
24 பந்துகளை எதிர்கொண்டு வெங்கடேஷ் ஐயர் தனது அரைசதத்தினை எட்டினார்.
8 ரன்கள் எடுத்தால் கொல்கதா அணி ஐபிஎல் கோப்பையைத் தனதாக்கும். 9 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8.4 ஓவர்களில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 102 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 93 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7 ஓவர்களில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 84 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 72 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
கொல்கத்தா அணியின் பவுலிங் யூனிட் சிறப்பாக பந்து வீசியது மட்டும் இல்லாமல் நடப்புத் தொடரில் அனைவரும் 10 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளனர்.
4.2 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
3 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 37 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளை எதிர்கொண்ட வெங்கடேஷ் ஐயர் அதில் ஒரு பவுண்டரியும் இரண்டு சிக்ஸர்களும் விளாசினார்.
18.3 ஓவர்களில் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ஆட்டத்தின் 18வது ஓவரின் 5வது பந்தில் உனத்கட் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகின்றது.
17 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
16 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகின்றது.
இறுதிப் போட்டியில் ஆட்டத்தின் 15வது ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா அந்த ஓவரில் க்ளாசன் விக்கெட்டினை கைப்பற்றியது மட்டும் இல்லாமல், அந்த ஓவரை மெய்டனாக வீசினார்.
15 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்து மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது.
ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் க்ளாசன் 17 பந்தில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் இன் - சைடு எட்ஜ் மூலம் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
14 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டிகளை இழந்து 82 ரன்கள் சேர்த்து தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது.
அப்துல் சமாத் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை ரஸல் கைப்பற்றினார். இவர் 4 பந்தில் 4 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
12 ஒவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதரபாத் அணி தனது 6வது விக்கெட்டினை இழந்தது. ஹைதராபாத் அணியின் ஷபாஸ் அகமது தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 7 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
ஹைதராபாத் அணி 11 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் மட்டும் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் 11வது ஓவரில் மார்க்கரம் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 23 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் சேர்த்திருந்தார்.
10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்களில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எட்டியுள்ளது.
8வது ஓவரின் 4வது பந்தில் ஹைதராபாத் அணி 50 ரன்களை எட்டியது. ஆனால் அதற்குள் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
7 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் சேர்த்த்து விளையாடி வருகின்றது.
நிதிஷ் ரெட்டி தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 7வது ஓவரில் இழந்து வெளியேறினார். இவர் 13 பந்தில் 10 ரன்கள் சேர்த்திருந்தார்.
பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகின்றது.
நடப்புத் தொடரில் டிராவிஸ் ஹெட் கொல்கத்தாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆகியுள்ளார்.
ஆட்டத்தின் 5வது ஓவரில் ராகுல் திருப்பாதி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 13 பந்தில் 9 ரன்கள் சேர்த்தார். இவரது விக்கெட்டினை ஸ்டார்க் கைப்பற்றினார்.
4 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
3 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் டிராவிஸ் ஹெட் டக் அவுட் முறையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
அபிஷேக் சர்மா க்ளீன் போல்ட் ஆன வீடியோ வைரலாகி வருகின்றது.
முதல் ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்தது மட்டும் இல்லாமல் மூன்று ரன்கள் மட்டும் சேர்த்துள்ளது.
முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் அபிஷேக் சர்மா க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் இரண்டு ரன்கள் சேர்த்தார்.
ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் தொடங்கியுள்ளனர்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட இரு அணி வீரர்களும் களமிறங்கியுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், டி நடராஜன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (விளையாடும் XI): ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வித்தியாசமான முறையில் டாஸ் போட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், தாங்கள் டாஸ் வென்றாலும் பந்து வீசவே முடிவு செய்திருந்தோம் என கூறியுள்ளார். இதன் மூலம் இரு அணி கேப்டன்களும் தங்களது ஆட்டத்திட்டத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் களமிறங்குவதால் இன்றைய ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
ஐபிஎல் 2024 கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
விளையாடியது: 27
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 17
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 9
டை: 1
2. விருத்திமான் சாஹா (KXIP) - 115* vs KKR (2014)
3. சாய் சுதர்சன் (GT) - 96 vs CSK (2023)
4. முரளி விஜய் (CSK) - 95 vs RCB (2011)
1. எம்எஸ் தோனி (சிஎஸ்கே) - 11 இன்னிங்ஸில் 8 (விக்கெட் கீப்பராக)
2. ரவீந்திர ஜடேஜா (சிஎஸ்கே) - 8 இன்னிங்ஸ்களில் 6
3. சுரேஷ் ரெய்னா (சிஎஸ்கே) - 8 இன்னிங்ஸ்களில் 6
ஜெய்தேவ் உனத்கட், ஜாதவேத் சுப்ரமணியன், டி நடராஜன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹக் ஃபரூக்கி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, சன்விர் சிங், கிளென் பிலிப்ஸ், நிதிஷ் ரெட்டி, மார்கோ ஜான்சன், அபிஷேக் ஷர்மா, உபேந்திரா ஷர்மா, , ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், அன்மோல்ப்ரீத் சிங், மயங்க் அகர்வால், அப்துல் சமத், ஆகாஷ் மஹராஜ் சிங், வனிந்து ஹசரங்க.
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஸ்ரீகர் பாரத், மணீஷ் பாண்டே, ரஹ்மானுல்லா குர்பாஸ், ரமன்தீப் சிங், நிதிஷ் ராணா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வைபவ் அரோரா, ஹர்ஷிமந்த ரமேரா. ரஹ்மான், சேத்தன் சகாரியா, மிட்செல் ஸ்டார்க், சுயாஷ் ஷர்மா, வருண் சக்கரவர்த்தி, சாகிப் ஹுசைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவும் ஹைதராபாத்தும் இன்னும் சற்று நேரத்தில் மோதவுள்ளது.
Background
KKR Vs SRH, IPL 2024 Final: கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ள ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி:
கடந்த மார்ச் மாதம் இறுதியில் 10 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடர், சர்வதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. 70 லீக் போட்டிகளின், ஒரு எலிமினேட்டர் மற்றும் 2 தகுதிச் சுற்றுக போட்டிகளின் முடிவில், சிறந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. அதன்படி, நடப்பாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை உறுதி செய்யும் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன.
கொல்கத்தா Vs ஐதராபாத் மோதல்:
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள, எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கொல்கத்தா அணி லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்ததோடு, முதல் தகுதிச்சுற்று போட்டியிலேயே ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியிலும் வென்று, மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. மறுமுனையில் ஐதராபாத் அணியோ, முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்றாலும், இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்று மற்றும் தகுதிச்சுற்று என இரண்டிலும் நடப்பு தொடரில், கொல்கத்தா அணியிடம் தோல்வியையே சந்தித்துள்ளது. அந்த தோல்விகளுக்கு பழிவாங்கும் விதமாக இன்றைய போட்டியில் வென்று, இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல ஐதராபாத் அணி களமாட உள்ளது. இதனால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் சுனில் நரைன், ரஹ்மனுல்லா குர்பாஸ், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் அய்யர், ரமன்தீப், ரஸல் மற்றும் ராணா என பல அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசைகட்டுகின்றனர். பந்துவீச்சிலும் மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்ரவர்த்தி என மேட்ச் வின்னர்கள் இடம்பெற்றுள்ளனர். பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் உடன் சரியான கலவையில் ஆல்-ரவுண்டர்கள் என, கொல்கத்தா அணி வலுவான பிளேயிங் லெவன் கட்டமைப்பை கொண்டுள்ளது. பெரும்பாலான போட்டிகளில் கூட்டு முயற்சியில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணியின் பெரும் பலமாகும். நடப்பு தொடரில் ஏற்கனவே இரண்டு முறை ஐதராபாத்தை வீழ்த்தி இருப்பது, கொல்கத்தா அணியை மனதளவில் வலுவடைய செய்துள்ளது.
மறுமுனையில் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், கிளாசென் மற்றும் நிதிஷ் ரெட்டி என அதிரடி பேட்ஸ்மேன்கள் காத்திருக்கின்றனர். இவர்களை சமாளிப்பது கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஆனால், அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால், பின்கள வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறுவதை இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியிலும் காண முடிந்தது. பந்துவீச்சில் நடராஜன், புவனேஷ்வர் குமார், பேட் கம்மின்ஸ் என ஆகச்சிறந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனாலும், பல போட்டிகளில் இந்த வீரர்கள் ரன்களை வாரி வழங்கியதை காண முடிந்தது. சரியான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்ற விமர்சனம் இருந்தபோதிலும், பகுதி நேர சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டே கடந்த போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தியுள்ளது. அந்த போட்டியும் சென்னையில் நடைபெற்றதால், அதில் கிடைத்த அனுபவம் இன்றைய போட்டிக்கு உதவும் என ஐதராபாத் அணி நம்புகிறது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 18 முறையும், ஐதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 208 ரன்களையும், குறைந்தபட்சமாக 101 ரன்களையும் சேர்த்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 228 ரன்களையும், குறைந்தபட்சமாக 115 ரன்களையும் சேர்த்துள்ளது.
சேப்பாக்கம் மைதானம் எப்படி?
சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானம், வழக்கமாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். 160+ என்ற இலக்கை சேஸ் செய்வது என்பதே கடினமானதாகவே இருக்கும். ஆனால், நடப்பாண்டில் பேட்டிங் சற்று எளிதானதாகவே காணப்படுகிறது. இதனால், பேட்ஸ்மேன்கள் சேப்பாக்கம் மைதானத்திலும் அதிரடியாக ரன்களை குவித்துள்ளனர். இதனால், இன்றைய இறுதிப்போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிக்க வாய்ப்புள்ளது.
உத்தேச அணி விவரங்கள்:
கொல்கத்தா: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே
- - - - - - - - - Advertisement - - - - - - - - -