IND vs IRE T20 LIVE Score: கெத்துக்காட்டிய இந்திய அணி.. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
IND vs IRE T20 World Cup 2024 LIVE Score: இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை 2024 போட்டி குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்தின் இரண்டாவது குறைந்த ஸ்கோராக இது அமைந்தது. முன்னதாக, 2010 உலகக் கோப்பையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அயர்லாந்து அணி வெறும் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போது 96 டி20 உலகக் கோப்பையில் அவரது இரண்டாவது குறைந்த ஸ்கோராகும். டி20 உலகக் கோப்பையில் 100 ரன்களுக்குள் இந்தியா அணி கட்டுப்படுத்திய நான்காவது அணி என்ற மோசமான சாதனையை அயர்லாந்து படைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை இந்திய அணி 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 96 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
11 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் 8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழந்து 36 ரன்கள் எடுத்துள்ளது அயர்லாந்து அணி.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஆண்ட்ரியோ 5 ரன்களில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் க்ளீன் போல்டாகினார்.
அர்ஷ்தீப் சிங் வீசிய 2 ஓவரில் அயர்லாந்து கேப்டன் ஸ்டெர்லிங் 2 ரன்களில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அயர்லாந்துக்கு எதிராக முதல் ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் முதல் ஓவர் வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்தார்.
பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர்(விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் வைட்
ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்
டி20 உலகக் கோப்பை 2024ல் இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
Background
டி20 உலகக் கோப்பை 2024ல் இன்று அதாவது ஜூன் 5ம் தேதி, இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. மேலும், 2024 டி20 உலகக் கோப்பையில் இது எட்டாவது போட்டியாகும். இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பை 2024ல் இந்த போட்டி குரூப் ஏ-வின் இரண்டாவது போட்டி. இதற்கு முன்னதாக குரூப் ஏ-வில் உள்ள கனடா - அமெரிக்கா அணிகள் மோதின. இவ்வாறான நிலையில் இன்று அனைவரின் பார்வையும் நியூயார்க்கின் வானிலை மீதே இருக்கும். இந்தியாவின் முதல் போட்டியானது மழையால் பாதிக்கப்படுமா அல்லது நடைபெறுமா என்பதை இங்கே பார்க்கலாம்.
வானிலை எப்படி..?
Weather.com படி, நியூயார்க்கில் காலையில் வானம் தெளிவாக இருக்கும் என்றும், வெப்பநிலை சுமார் 30°C ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . இருப்பினும், போட்டியின் போது லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் காற்றின் ஈரப்பதம் 54% ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் ரிப்போர்ட்:
இருவருக்கும் இடையிலான இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது ஒரு புதிய மைதானம், இதில் இன்னும் அதிக போட்டிகள் விளையாடப்படவில்லை. இந்த மைதானத்தின் ஆடுகளம் இப்போது வரை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த சில போட்டிகளில், மிகவும் ஸ்லோவாக காணப்பட்டது. இதைவிட அவுட் ஃபீல்ட் மிக மெதுவாக இருந்தது. இதன் காரணமாக, பேட்ஸ்மேன்களால் பெரியளவில் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர்களான நார்ட்ஜே, ரபாடா ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாகவே செயல்பட்டனர். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஹர்திக் பாண்டியா, வலிமையால் சிக்ஸர்கள் அடித்ததுபோல், மற்ற பேட்ஸ்மேன்களுக்கு சிக்ஸர் அடித்தால்தான் அணியின் ரன் எண்ணிக்கை உயரும்.
சமீபத்தில், பெரிய அணிகளை தோற்கடித்த அயர்லாந்து:
சமீபத்தில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய சில போட்டிகளில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. ஆனால் தொடரை வெல்ல முடியவில்லை.
மேலும், அயர்லாந்து அணி, இந்திய அணியை இதுவரை 8 முறை டி20யில் சந்தித்துள்ளது. இதில், அயர்லாந்து அணியால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதில் இந்திய அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், ஒருமுறை போட்டி மழையால் ரத்து ஆனது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
இந்தியா அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
அயர்லாந்து அணி:
லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஆண்டி பால்பிர்னி, ஹாரி டெக்டர், மைர் அடேர், பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கர்டிஸ் கேம்பர், பேரி வைட், ஜோசுவா லிட்டில், கிரேக் யங்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -