வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சுனில் நரைன் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடவுள்ளன. இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் வரலாறு படைக்கும் விளிம்பில் உள்ளார்.
அப்படி என்ன சாதனை..?
ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஐபிஎல் சீசனில் 15 விக்கெட்கள் மற்றும் 500 ரன்களுக்கு மே அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க சுனில் நரைனுக்கு 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், அவர் 2 பந்தில் 1 சிக்ஸருடன் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், அவர் இந்த தொடரில் 488 ரன்கள் மட்டுமே எடுத்து 500 ரன்களை தொடும் வாய்ப்பை தவறவிட்டார். நடந்து வரும் ஐபிஎல் 2024 சீசனில் சுனில் நரைன் இதுவரை 13 போட்டிகளில் 179.85 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ளார்.
இதன்மூலம் தற்போதைய ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இன்றைய இறுதிப் போட்டியில் நரைன் இன்னும் 12 ரன்கள் எடுத்திருந்தால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் சீசனில் 500 ரன்கள் எடுத்த கௌதம் காம்பீர், ராபின் உத்தப்பா மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோருக்குப் பிறகு நான்காவது வீரர் என்ற பெருமையை தவறவிட்டுள்ளார்.
500 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கம்பீர் இரண்டு முறை 500 ரன்களை கடந்துள்ளார். உத்தப்பா மற்றும் ரஸல் தலா ஒரு முறை 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் உத்தப்பா முதலிடத்தில் உள்ளார்.
2014 பதிப்பில் உத்தப்பா 16 போட்டிகளில் 660 ரன்கள் எடுத்து, ஆரஞ்சு கேப்பையும் வென்றார். காம்பீர் 2012ல் 590 ரன்களும், 2016ல் 501 ரன்களும் எடுத்தார். ரஸல் ஐபிஎல் 2019 பதிப்பில் 14 போட்டிகளில் 204.81 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 510 ரன்களை எடுத்தார். நடப்பு ஐபிஎல் 2024 சீசனில் 6.90 என்ற எகானமியில் நரைன் இதுவரை 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இரு அணிகள்:
கொல்கத்தா லீக் கட்டத்தில் 9 வெற்றி, 3 தோல்வி மற்றும் 2 டிராவில் 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் தகுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தோற்கடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான இரண்டாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்ற பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் 114 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் கொல்கத்தா அணி அதிரடியாக ஆடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி தொடக்க வீரர்கள் சொதப்பியதால் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினர். இதனால், அவர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.