KKR vs RR Score LIVE updates :கடைசி விக்கெட்டாக வெளியேறிய ராகுல் திவேதியா : 86 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா
IPL 2021 KKR vs RR Cricket Score LIVE ஐ.பி.எல். தொடரில் அபுதாபியில் நடைபெறும் 54வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.
கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், கொல்கத்தா அணி 86 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்தாலும் ராகுல் திவேதியாவின் அதிரடியால் அந்த அணி 15 ஓவர்களில் 83 ரன்களை எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த நிலையில், ராகுல் திவேதியா அதிரடியால் ராஜஸ்தான் அணி 50 ரன்களை கடந்தது.
ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சற்றுமுன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சற்றுமுன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
கொல்கத்தா அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஷிவம் துபே 6 ரன்னுடனும், கிளன் பிலிப்ஸ் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 172 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த திரிபாதி 14 பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சக்காரியா பந்தில் போல்டாகி வெளியேறினார்.
கொல்கத்தா வீரர் முஸ்தபிஷிர் ரஹ்மான் வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸர் மைதானத்தின் கூரைக்கு மேலே சென்றது.
கொல்கத்தா தொடக்க வீரர் சுப்மன் கில் அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் கிறிஸ் மோரிஸ் பந்தில் ஜெய்ஷ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 44 பந்தில் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்
முஸ்தபிஷிர் ரஹ்மான் வீசிய 12வது ஓவரின் கடைசி பந்தில் ராகுல் திரிபாதி கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கோட்டைவிட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஆடி வரும் கொல்கத்தா அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. திரிபாதி 4 ரன்களுடனும், சுப்மன் கில் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி பவர்ப்ளே முடிவில் 6 ஓவர்களில் 34 ரன்களை எடுத்துள்ளது.
Background
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -