KKR vs RCB, IPL 2023 LIVE: நரைன் - சக்ரவர்த்தி- சுயாஷ் சுழலில் சம்பவம்.. பெங்களூரு அணி படுதோல்வி

KKR vs RCB, IPL 2023 LIVE Score: நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று நடக்கும் லீக் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 06 Apr 2023 11:14 PM
123 ரன்களுக்கு பெங்களூரு ஆல்-அவுட்

17.4 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 123 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

9வது விக்கெட்டை இழந்த பெங்களூரூ

9வது விக்கெட்டாக கரண் சர்மா ஆட்டமிழந்தார்.

கடைசி நம்பிக்கையையும் இழந்த பெங்களூரு..

பெங்களூரு அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த தினேஷ் கார்த்திக், 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

7வது விக்கெட்டை இழந்த பெங்களூரு

பெங்களூரு அணியின் அனுஜ் ராவத் ஒரு ரன் மட்டுமே எடுத்து கேட்ச் முறையில் அவுட்டானார்.

பிரேஸ்வெல்லும் அவுட்...

பேட்டிங்கில் அசத்திய ஷர்தூல் தாக்கூர் வீசிய ஓவரின் முதல் ஓவரிலேயே, பிரேஸ்வெல்லும் கேட்ச் முறையில் அவுட்டானார்.

முடிந்தது 10 ஓவர்.. மீளுமா பெங்களூரு?

10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூரு அணி 69 ரன்களை சேர்த்துள்ளது.

மோசமான நிலையில் பெங்களூரு..

205 ரன்கள் எனும் கடினமான இலக்கை நோக்கி விளையாடி வரும் பெங்களூரு, 61 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

சுழலில் கழண்டு ஓடும் ஆர்சிபி விக்கெட்டுகள்

சுனில் நரைன் பந்துவீச்சில் ஷாபாஸ் அகமது கேட்ச் முறையில் அவுட்டானார்.

மீண்டும் ஒரு போல்ட்..

4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஹர்ஷல் படேல், வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 2 பந்துகளை எதிர்கொண்ட அவர் ரன் எதுவும் எடுக்கவில்லௌ. 

போல்ட்க்ளால் கதிகலங்கும் பெங்களூரு..

வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில்  கிளென் மேக்ஸ்வெல் கிளீன் போல்டானார். முன்னதாக கோலி மற்றும் டூப்ளெசியும் கூட போல்ட் முறையில் தான் அவுட் ஆகினர்.

பவர்பிளே முடிந்தது.. சறுக்கலில் ஆர்சிபி

பவர்பிளேயின் ஆறு ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை சேர்த்துள்ளது.

டூப்ளெசியும் நடையை கட்டினார்...

23 ரன்கள் எடுத்து இருந்தபோது வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் டூப்ளெசிஸ் கிளீன் போல்டானார்

சாதனையை தவறவிட்ட கோலி..

21 ரன்களை எடுத்து இருந்தபோது சுனில் நரைன் பந்துவீச்சில் விராட் கோலி கிளீன் போல்டானார். இன்னும் 8 ரன்கள் எடுத்து இருந்தால் ஈடன் கார்டன் மைதானத்தில் 500 ரன்களை பூர்த்தி செய்து இருப்பார்.

கொல்கத்தாவை பதம் பார்க்கும் கோலி - டூப்ளெசிஸ் ஜோடி

கோலி - டூப்ளெசிஸ் ஜோடி 4 ஓவர்கள் முடிவில் 42 ரன்களை சேர்த்து பெங்களூரு அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்துள்ளது.

3 ஓவர்கள் முடிந்தது..

3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி பெங்களூரு அணி 19 ரன்களை சேர்த்துள்ளது

மிரட்டிய கொல்கத்தா.. இலக்கை எட்டுமா பெங்களூரு?

ஆரம்பத்தில் தடுமாறினாலும் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஷர்தூல் தாக்கூர் 68 ரன்களையும், ரிங்கு சிங் 46 ரன்களையும் குவித்தனர்.

கொல மாஸ் ஆன இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது..

29 பந்துகளில் 68 ரன்களை சேர்த்து ஷர்தூல் ஆட்டமிழந்தார்

முடிவுக்கு வந்த பார்ட்னர்ஷிப்..

தாக்கூருடன் சேர்ந்து 100 ரன்களை சேர்த்த ரிங்கு சிங், 46 ரன்களை எடுத்து இருந்தபோது கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

100 ரன்களை விளாசிய பார்ட்னர்ஷிப்..

6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஷர்தூல் தாக்கூர் - ரிங்கு சிங் ஜோடி, 48 பந்துகளில் 103 ரன்களை சேர்த்துள்ளது.

ரன்களை வாரி வழங்கும் ஆர்சிபி பவுலர்கள்..

ஆரம்பத்தில் அட்டகாசமாக பந்துவீசிய ஆர்சிபி அணியினர், இறுதிகட்டத்தில் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர்.

அரைசதம் விசாசினார் லார்ட் ஷர்துல் தாக்கூர்

அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாக்கூர் 20 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார் 

15 ஓவர்கள் முடிந்தது.. யார் கை ஓங்கியுள்ளது?

15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களை சேர்த்துள்ளது.

33 பந்துகளில் அரைசதம்..

ஷர்துல் மற்றும் ரிங்கு சிங் ஜோடி வெறும் 33 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியது

விடாமல் அடிக்கும் ஷர்துல் தாக்கூர்

ஷர்தூல் தாக்கூரின் அதிரடி ஆட்டத்தால் 14 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 124 ரன்களை சேர்த்துள்ளது

அதிரடியில் மிரட்டும் ஷர்துல் தாக்கூர்

அதிரடியாக விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர் 8 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 21 ரன்களை சேர்த்துள்ளார்.

100 ரன்களை தாண்டிய கொல்கத்தா...

12.2 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை 100 ரன்களை கடந்தது

வந்த வேகத்தில் திரும்பிய ரஸல்..

ஆண்ட்ரூ ரஸல் களமிறங்கிய முதல் பந்திலேயே கேட்ச் முறையில் டக்-அவுட் ஆனார்...

முடிந்ததா கொல்கத்தாவின் கதை?..

கொல்கத்தாவிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி வந்த குர்ப்ராஸ், 44 பந்துகளில் 57 ரன்களை சேர்த்து இருந்த நிலையில் கரண் சர்மா பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டானார்.

10 ஓவர்கள் முடிவில் நிலவரம்

10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்களை சேர்த்தது

அரைசதம் கடந்தார் குர்ப்ராஸ்..
அதிரடியாக ஆடிய குர்ப்ராஸ் 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.
ஒன் மேன் ஆர்மி குர்பாஸ்..

கொல்கத்தா அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க, தொடக்க ஆட்டக்காரரான குர்ப்ராஸ் மட்டும் பெங்களூரு பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு வருகிறார். தற்போது வரை அவர் 47 ரன்களை சேர்த்துள்ளார்.

அடுத்து களமிறங்க உள்ள கொல்கத்தா வீரர்கள்...

ஆண்ட்ரூ ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்தூல் தாக்கூர், டிம் சவுதி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி

50 ரன்களை எட்டியது கொல்கத்தா...

6.5 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 50 ரன்களை எட்டியது

முதல் பந்திலேயே விக்கெட்..

மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய ஓவரின் முதல் பந்திலேயே நிதிஷ் ராணா கேட்ச் முறையில் அவுட்டானார்

பவர் பிளே முடிந்தது.. யார் பக்கம் ஆட்டம்?

பவர்பிளேயின் 6 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை  இழந்து 47 ரன்களை எடுத்துள்ளது.

கொல்கத்தாவை காப்பாற்றுவாரா குர்பாஸ்?...

கொல்கத்தா அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பொறுப்புடன் விளையாடி வரும் குர்பாஸ் 22 ரன்களை சேர்த்துள்ளார்.

மெய்டன் ஓவர் வீசிய வில்லி...

போட்டியின் நான்காவது ஓவரை வீசிய வில்லி, 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அந்த ஓவரில் ரன் எதையும் கொடுக்காமல் மெய்டன் ஓவர் ஆக்கினார்.

ஸ்டம்புகளை சிதறவிட்ட வில்லி

போட்டியின் நான்காவது ஓவரை வீசிய வில்லி, அந்த ஓவரின் 2 மற்றும் 3வது பந்தில் வெங்கடேஷ் அய்யர் மற்றும் மந்தீப் சிங்கின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார்.

டக்-அவுட் ஆன மந்தீப் சிங்

எதிர்கொண்ட முதல் பந்திலேயே போல்டாகி, டக்-அவுட் ஆனார் மந்தீப் சிங்

வெங்கடேஷ் அய்யரை வீட்டுக்கு அனுப்பிய வில்லி..

நான்காவது ஓவரை வீசிய வில்லியின் பந்துவீச்சில் வெங்கடேஷ் அய்யர் கிளீன் போல்டானார். அவர் 3 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்தடுத்து 3 பவுண்டரிகள்...

முகமது சிராஜ் வீசிய போட்டியின் 3வது ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகள் விளாசப்பட்டன. இதன் மூலம் 3வது ஓவரின் முடிவில் கொல்கத்தா அணி 26 ரன்களை சேர்த்துள்ளது.

பாலுக்கு பால் ரன்..

2 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்களை சேர்த்துள்ளது.

முதல் ஓவர் முடிந்தது..

போட்டியின் முதல் ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 ரன்கள் எடுத்தது

போட்டியின் முதல் ஓவர்..

போட்டியின் முதல் ஓவரை வீசுகிறார் முகமது சிராஜ்

சாதனை படைப்பாரா ஹர்ஷல் படேல்?

பெங்களூர் பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்களை எடுக்க 2 விக்கெட்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

150வது போட்டியில் சுனில் நரைன்..

சுனில் நரைன் ஐபிஎல் தொடரில் இன்று தனது 150 போட்டியில் விளையாடுகிறார்


 

500 ரன்களை எட்டுவாரா கார்த்திக்?

பெங்களூரு அணிக்காக 500 ரன்களை சேர்க்க, தினேஷ் கார்த்திக்கிற்கு இன்னும் 29 ரன்கள் மட்டுமே தேவை

கொல்கத்தா இம்பேக்ட் பிளேயர்ஸ்:

சுயாஷ் சர்மா, வைபவ் அரோரா, என் ஜெகதீசன், டேவிட் வீஸ்

கொல்கத்தா பிளேயிங் லெவன்:

மந்தீப் சிங், என் ராணா (கேப்டன்) , ஆர் சிங், ஆண்ட்ரூ ரஸ்ஸல் , சுனில் நரைன் , எஸ் ஷர்மா,  ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்) , ஷர்துல் தாக்கூர் , டிம் சவுத்தி , வருண் சக்ரவர்த்தி , உமேஷ் யாதவ்

பெங்களூரு இம்பேக்ட் பிளேயர்ஸ்:

பின் ஆலன்,சோனு யாதவ், மஹிபால் லோம்ரோர், சுயாஷ் பிரபுதேசாய் மற்றும் அனுஜ் ராவத்

பெங்களூரு பிளேயிங் லெவன்:

டூப்ளெசிஸ்,  விராட் கோலி , மைக்கேல் பிரேஸ்வெல் , கிளென் மேக்ஸ்வெல் , DJ வில்லி , சபாஷ் அகமது , தினேஷ் கார்த்திக்( விக்கெட் கீப்பர்) , ஆகாஷ் தீப் , முகமது சிராஜ் , ஹர்ஷல் படேல் , கரண் சர்மா

டாஸ் வென்ற ஆர்.சி.பி...! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா கொல்கத்தா..?

பெங்களூர் அணி கேப்டன் டுப்ளிசிஸ் டாஸ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

சாதனை படைப்பாரா கோலி?

ஈடன் காடர்ன் மைதானத்தில் இதுவரை 471 ரன்களை எடுத்துள்ள கோலிக்கு, 500 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 29 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றைய போட்டியில் 92 ரன்களை சேர்த்தால் டி-20 போட்டிகளில் 11,500 ரன்களை பூர்த்தி செய்வார். 

ஈடன் கார்டன் மைதானத்தில் கோலி

கடைசியாக 2019ம் ஆண்டு ஈடன் கார்டன் மைதானத்தில் பெங்களூரு அணிக்காக களமிறங்கிய கோலி சதமடித்து அசத்தினார்

Background

KKR vs RCB, IPL 2023 LIVE Score


நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று நடக்கும் லீக் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


16வது ஐபிஎல் சீசன்:


நடப்பாண்டுக்கான ஐபிஎல் சீசன்  கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி குஜராத் அஹமதாபாத் மைதானத்தில் கோலகலமாக தொடங்கியது. 3 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் அணி உள்ளூர் மைதானத்தில் விளையாடி வருவதால் ரசிகர்களும் ஆர்வமுடன் ஐபிஎல் போட்டிகளை கண்டுகளித்து வருகின்றனர். கடந்தாண்டைப் போல இந்த சீசனிலும் சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.


இதுவரை 8 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்கள் முதல் போட்டியில் விளையாடி விட்டன. இன்று நடக்கும் 9வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.இந்த ஆட்டமானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை


கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் கொல்கத்தா அணி விளையாடியது. ஆனால் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் இந்த சீசனில் இருந்து விலகியதால் நிதிஷ் ராணா அணியை வழி நடத்தி வருகிறார். அவரது தலைமையிலான அணி தனது முதல் ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் பஞ்சாப் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 


அதேசமயம் ஃபாஃப் டூப்ளெசிஸ் தலைமையிலான  பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா அணி 16 ஆட்டங்களிலும், பெங்களூரு அணி 14 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


மைதானம் எப்படி? 


பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக திகழும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரை 78 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 47 ஆட்டங்களில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் இம்மைதானத்தில் அதிகப்பட்ச ரன்னை கொல்கத்தா அணியும் (232 ரன்கள்), குறைந்தப்பட்ச ரன்களை (49 ரன்கள்) பெங்களூர் அணியும் பதிவு செய்துள்ள்ளது. கொல்கத்தா அணி இந்த மைதானத்தில் 74 ஆட்டங்களில் 45 வெற்றி மற்றும் 29 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் பெங்களூரு அணி  11 ஆட்டங்களில் விளையாடி  ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது.


அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்) 



கொல்கத்தா: ரஹ்மானுல்லா குர்பாஸ், மன்தீப் சிங், நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரூ ரஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி


பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், கரண் ஷர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ்


தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் வீரர் (impact Player) யார்? 
கொல்கத்தா அணியில் அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா, குல்வந்த் கெஜ்ரோய்யா, வெங்கடேஷ் ஐயர் போன்றவர்களில் ஒருவர் மீண்டும் இம்பாக்ட் பிளேயராக இடம் பெறலாம். பெங்களூரு அணியில் சுயாஷ் பிரபுதேசாய், அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர், சோனு யாதவ் மற்றும் ஃபின் ஆலன் ஆகியோரில் ஒருவர் இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்படலாம்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.