ஐ.பி.எல். தொடரின் 16வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பு தொடரின் பலமிகுந்த அணியாக உலா வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  இன்று மற்றொரு பலமான அணியான லக்னோவுடன் மோதுகிறது. ராஜஸ்தான் அணியின் சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் இந்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. 


நடப்பு தொடர் தொடங்கியது முதலே மிகவும் ஆக்ரோஷமாகவும் அதிரடியாகவும் ஆடி வரும் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ளது. இதுவரை இந்த தொடரில் ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதனால், 8 புள்ளிகளுடன் 1.35 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மிகவும் பலமான அணியாகவே உள்ளது. அந்த அணி இதுவரை தாங்கள் ஆடிய 5 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே தோல்வியை அடைந்துள்ளது. 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ராஜஸ்தானுடன் புள்ளிகளை சமன் செய்ய லக்னோ அணி களத்தில் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 


பேட்டிங் என்று ஒப்பிட்டு பார்த்தால் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் சம பலத்துடன் உள்ளன. ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாக ஜோஸ் பட்லர் உள்ளார். அவர் எப்போதும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வீரர் ஆவார். அவர் அதிரடியாக ஆடினால் ராஜஸ்தான் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயரும் லக்னோ அணியை பொறுத்தவரை மேயர்ஸ் அதிரடியான தொடக்கத்தை அளிப்பார் என்று நம்பலாம். பவர்ப்ளேவில் அதிரடி காட்டி அசத்தி வருகிறார்.  ஸ்டோய்னிசும், பூரணும் லக்னோ அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளனர். இருவரும் 20 பந்துகள் வரை களத்தில் பேட் பிடித்தாலே சிக்ஸர் விருந்து வைத்துவிடுகின்றனர். 


ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேயிங் லெவன்: 


ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்


ராஜஸ்தான் ராயல்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள் 


தேவ்தத் படிக்கல், முருகன் அஸ்வின், டொனாவன் ஃபெரீரா, நவ்தீப் சைனி, ஜோ ரூட்


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்


கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, நவீன்-உல்-ஹக், அவேஷ் கான், யுத்வீர் சிங் சரக், ரவி பிஷ்னோய்


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள் 


அமித் மிஸ்ரா, ஜெய்தேவ் உனட்கட், கிருஷ்ணப்பா கௌதம், பிரேரக் மங்காட், டேனியல் சாம்ஸ்