நடிகர் ரஜினி காந்தின் கபாலி பட போஸில் எடுக்கப்பட்ட போஸை போல் தான் காப்பி அடித்தது குறித்து எம்.எஸ். தோனி ஜாலியாக விளக்கமளித்துள்ளார். 


நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி, பயிற்சியாளர் பிளமிங், அம்பத்தி ராயுடு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டம் எம்.எஸ். தோனியிடம், கடந்த 2016ம் ஆண்டு கபாலி படத்தில் ரஜினி காந்த் கொடுத்த போஸை போன்று நீங்கள் போஸ் கொடுத்து அதை உங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தீர்கள். இந்த படம் அருமையாக இருந்தது. இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், யார் இதில் இன்ஸ்பேரஷனாக எடுத்து கொள்வீர்கள்..? என கேள்வி எழுப்பினர். 






அதற்கு பதிலளித்த எம்.எஸ்.தோனி, “ இது ஒப்பீடு எதுவும் இல்லை. ரஜினியின் மாஸான போஸை அப்படியே காப்பியடிக்க முயற்சி செய்தோம்; அவரைப் போல செயல்களை செய்வதும் யோசிப்பதும் மிகவும் கடினம். குறைந்தபட்சம் நாங்கள் அவரது போஸையாவது காப்பியடிக்க முயற்சி செய்தோம்” என்றார். 


இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


அந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது இணையத்தில் வைரலானது. கபாலி படத்தில் நடிகர் ரஜின்காந்த் போல் கம்பீரமான ஸ்டைலில் தோனி சேரில் அமர்ந்து போஸ் கொடுத்திருப்பார்.






தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். இதுவே தோனியின் கடைசி ஐபிஎல் தொடராகவும் பார்க்கப்படுகிறது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி, 200 போட்டிகளுக்கு மேல் தலைமை தாங்கியுள்ளார். இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் சென்னை 3வது இடத்தில் உள்ளது. 


வருகின்ற ஏப்ரல் 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.