IPL Auction Dates: ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு வீரர்களுக்கான, மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் தேதி அறிவிப்பு
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் இந்த ஏலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க சர்வதேச அளவில் இருந்து மொத்தம் ஆயிரத்து 574 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதில், ஆயிரத்து 165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். மேலும், முன்பதிவு செய்தவர்களில் 320 பேர் மட்டுமே சர்வதேச போட்டிகளில் அறிமுகமானவர்கள் ஆவர். மீதமுள்ள ஆயிரத்து 224 பேர் அன் - கேப்ட் வீரர்கள் ஆவர். 30 வீரர்கள் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்களாவர். இந்த ஏலத்தில் 204 வீரர்கள் மட்டுமே 10 அணிகள் சார்பில் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் விவரம்:
நாடு |
வீரர்கள் பதிவு |
ஆப்கானிஸ்தான் |
29 |
ஆஸ்திரேலியா |
76 |
வங்கதேசம் |
13 |
கனடா |
4 |
இங்கிலாந்து |
52 |
அயர்லாந்து |
9 |
இத்தாலி |
1 |
நெதர்லாந்து |
12 |
நியூசிலாந்து |
39 |
ஸ்காட்லாந்து |
2 |
தென்னாப்பிரிக்கா |
91 |
இலங்கை |
29 |
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் |
1 |
அமெரிக்கா |
10 |
வெஸ்ட் இண்டீஸ் |
33 |
ஜிம்பாப்வே |
8 |
அணிகளிடம் உள்ள ஏலத்திற்கான மீதத் தொகை:
ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதிகபட்சமாக 25 வீரர்களை தங்கள் வசம் வைத்திருக்கலாம். அதேநேரம், ஏலத்திற்கு முன்பே தக்கவைப்பு விதிகளை பயன்படுத்தி குறைந்தது 2 முதல் அதிகபட்சமாக 6 வீரர்களை அணிகள் தக்கவைத்துள்ளன. அவர்களுக்கு ஒதுக்கியது போக, மீதியுள்ள தொகையுடன் தான் அணி நிர்வாகங்கள் ஏல களத்தில் இறங்கவுள்ளன. எனவே, ஒவ்வொரு அணியின் கைவசமும் உள்ள மீதத் தொகை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- மும்பை இந்தியன்ஸ் கைவசம் உள்ள மீதத்தொகை ரூ. 55 கோடி ரூபாய் (120 கோடியில்)
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கைவசம் உள்ள மீதத்தொகை 69 கோடி ரூபாய் (120 கோடியில்)
-
சன்ரைசர்ஸ் ஐதராபாத் கைவசம் உள்ள மீதத்தொகை 45 கோடி ரூபாய் (120 கோடியில்)
-
பஞ்சாப் கிங்ஸ் கைவசம் உள்ள மீதத்தொகை: 110.5 கோடி ரூபாய் ( 120 கோடியில்)
-
ராஜஸ்தான் ராயல்ஸ் கைவசம் உள்ள மீதத்தொகை: 41 கோடி ரூபாய் (120 கோடியில்)
-
சென்னை சூப்பர் கிங்ஸ் கைவசம் உள்ள மீதத்தொகை ரூ.65 கோடி (120 கோடியில்)
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கைவசம் உள்ள மீதத்தொகை ரூ. 83 கோடி (120 கோடியில்)
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கைவசம் உள்ள மீதத்தொகை ரூ.51 கோடி ரூபாய் (120 கோடியில்)
-
டெல்லி கேபிடல்ஸ் வசம் மீதமுள்ள தொகை ரூ. 73 கோடி (120 கோடியில்)
- குஜராத் டைட்டன்ஸ் கைவசம் மீதமுள்ள தொகை: ரூ. 69 கோடி (120 கோடியில்)