15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூருவில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெறுகிறது. ஏலப்பட்டியலில் 220 வெளிநாட்டவர் உள்ளிட்ட மொத்தம் 590 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த நிலையில், தக்கவைக்கப்படாத 8 சிறந்த இந்திய வீரர்கள் பற்றி பார்ப்போம்.


 * ஹர்திக் பாண்டியா -  (மும்பை இந்தியன்ஸில் இருந்து வெளியேற்றம் - குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக ஒப்பந்தம் )


ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவைத் தக்கவைக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. அது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 2015ஆம் ஆண்டு ஹர்திக்கை மும்பை அணி கைப்பற்றியது. 28 வயதான அவர், தனது முதல் ஏலத்தில், 2014 இல் விற்கப்படாமல் போனார். ஆனால் 2015 இல், மும்பை ஹர்திக்கை அடிப்படை விலையான 10 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. அங்கிருந்து, ஹர்திக் மும்பை இந்தியன்ஸின் செல்லப்பிள்ளையாக இருந்து வந்தார். 7 வருடத்திற்கு பிறகு தற்போது அந்த அணியை விட்டு அவர் பிரிந்துள்ளார்.




புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அவரை 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஹர்திக் அணியை வழிநடத்த உள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவின் டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு தேசிய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவின் பங்கு


போட்டிகள் – 92 | ரன்கள் – 1476 | அதிக ரன்கள் – 91 | பேட்டிங் சராசரி – 27.33 | ஸ்ட்ரைக் ரேட் – 153.91 | விக்கெட்டுகள் – 42 | பவுலிங் சராசரி  – 9.06 | சிறந்த பந்துவீச்சு  - 3/20


* ஷ்ரேயாஸ் ஐயர் (டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேற்றம்)


ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு ஏலப் பட்டியலில் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். 27 வயதான அவர், 2015 இல் டெல்லி கேப்பிட்டல்ஸால் வாங்கப்பட்டார்.  2018 இல் அணியை வழிநடத்தி, ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணியை வழிநடத்தும் இளைய கேப்டன் ஆனார். ஐயர் டெல்லியில் கேப்டனாக இருந்தபோது, ​​2020 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அணிக்கு சென்றது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், சீசனின் முதல் கட்டத்தின் போது தோள்பட்டை காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் போட்டியில் இருந்து ஒதுங்கியபோது, ​​அணி நிர்வாகம் ரிஷப் பந்திடம் கேப்டன் பொறுப்புகளை ஒப்படைத்தது. 




பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகள், அந்தந்த அணிகளுக்கான கேப்டனைத் தேடும் நிலையில், அந்த வாய்ப்பு ஸ்ரேயாஸ்க்கு இருப்பதால், அவரை வாங்க போட்டிப்போடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஷ்ரேயாஸ் ஐயரின் பங்கு


போட்டிகள் – 87 | ரன்கள் – 2375 | அதிக ரன்கள் – 96 | பேட்டிங் சராசரி – 31.66 | ஸ்ட்ரைக் ரேட் - 123.95


ஏலத்திற்கான அடிப்படை விலை - 2 கோடி ரூபாய்



* ஷிகர் தவான்  (டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேற்றம்)


ஷிகர் தவான் 2008 இல் டெல்லி அணியுடன் ஒரு வருட கால இடைவெளியில் இருந்தார். பின்னர் 2019 இல், டெல்லி கேப்பிட்டல்ஸ் தவானை மீண்டும் வாங்கியது.
2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக, டெல்லி ஷிகரை தக்கவைக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. 36 வயதான மூத்த வீரர் இப்போது ஐபிஎல்லில் ஒரு புதிய அணியை தேடுகிறார். பெரும்பாலான அணிகள் தவானை தங்கள் வழக்கமான தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக வாங்க போட்டியிடும். 5784 ரன்களுடன், ஐபிஎல் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக தவான் இரண்டாவது இடத்தில் உள்ளார். 




டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஷிகர் தவானின் பங்கு


போட்டிகள் – 63 | ரன்கள் – 2066 | அதிக ரன்கள் – 106* | பேட்டிங் சராசரி – 38.98 | ஸ்ட்ரைக் ரேட் - 131.00


ஏலத்திற்கான அடிப்படை விலை - 2 கோடி ரூபாய்


* இஷான் கிஷன் (மும்பை இந்தியன்ஸால் வெளியிடப்பட்டது)


மும்பை இந்தியன்ஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக இஷானை வளர்த்தது. இன்று அவர் இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் மிகப்பெரிய வீரர்களில் ஒருவராக உள்ளார். மும்பை அணியால் இஷானைத் தக்கவைத்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களால் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால் இஷான் ஏலத்தில் வரும் நாளில் மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 




மும்பை அணியில் இஷான் கிஷனின் பங்கு


போட்டிகள் – 45 | ரன்கள் – 1133 | அதிக ரன்கள் – 99 | பேட்டிங் சராசரி – 31.47  | ஸ்ட்ரைக் ரேட் -138.50


ஏலத்திற்கான அடிப்படை விலை - 2 கோடி ரூபாய்


* யுஸ்வேந்திர சாஹல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவால் வெளியேற்றம்)


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் யுஸ்வேந்திர சாஹல். இந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக அவரது உரிமையால் தக்கவைக்கப்படாத மற்றொரு பெரிய வீரர் அவர். 31 வயதான அவர் 2014 முதல் 2021 வரை பெங்களூருவுடன் 8 வருட நீண்ட தொடர்பைக் கொண்டிருந்தார். ஆனால், இந்த முறை அந்த அணி அவரை தக்கவைக்கவில்லை. ஒரு புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர் சாஹலை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டிபோடும் என்று எதிர்பார்க்கலாம்.




ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சாஹலின் பங்கு


போட்டிகள் – 113 | விக்கெட்டுகள் – 139 | சராசரி – 7.58 | ஸ்ட்ரைக் ரேட் – 17.4 | சிறந்த பந்துவீச்சு - 4/25


ஏலத்திற்கான அடிப்படை விலை - 2 கோடி ரூபாய்


* சுப்மன் கில் (கொல்கத்தா நைட் ரைடர்ஸால் வெளியேற்றம்  - குஜராத் டைட்டன்ஸ் ஒப்பந்தம்)


கடந்த ஐபிஎல் தொடரின் போது, ​​கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அடுத்த கேப்டனாக ஷுப்மான் கில்லை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், கேகேஆர்,  சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்ரவர்த்தியை தக்கவைத்துக்கொண்டது. . 22 வயதான ஸ்டைலிஷ் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனான அவரை வரும் 2022 ஐபிஎல்லில் புதிதாக உருவான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏலத்திற்கு முன்னதாக 8 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுப்மான் கில்லின் பங்கு


போட்டிகள் – 58 | ரன்கள் – 1417 | அதிக ரன்கள்– 76 | பேட்டிங் சராசரி – 31.48 | ஸ்ட்ரைக் ரேட் - 123.00



* சுரேஷ் ரெய்னா (சென்னை சூப்பர் கிங்ஸால் வெளியேற்றம்)


ஐபிஎல் தொடரின் 12 சீசன்களில் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே உரிமையுடன் மிக நீண்ட ஆண்டுகளக இருந்தவர். ஐபிஎல் தரவரிசையில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்தவர் ரெய்னா. . விராட், ஷிகர் தவான், ரோஹித் சர்மா ஆகியோருக்குப் பின் ரெய்னா தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். மஞ்சள் படையுடனான சின்ன தலயின் பயணம் இந்த ஆண்டு முடிவடைந்தது.  அவரைத் தக்க வைத்துக் கொள்ளாமல், அதற்கு பதிலாக தோனி, ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட்டை தக்கவைத்துக்கொண்டது. புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், உள்ளூர் பையனான ரெய்னாவை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.




சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னாவின் பங்கு


போட்டிகள் – 176 | ரன்கள் – 4687 | அதிக ரன்கள் - 100* | பேட்டிங் சராசரி – 32.32 | ஸ்ட்ரைக் ரேட் - 136.88


ஏலத்திற்கான அடிப்படை விலை - 2 கோடி ரூபாய்


* க்ருனால் பாண்டியா (மும்பை இந்தியன்ஸால் வெளியேற்றம்)


பாண்டியா சகோதரர்களை மும்பை இந்தியன்ஸ் இந்த ஆண்டு விடுவித்துள்ளது. ஹர்திக், குஜாராத் அணியின் கேப்டனாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், க்ருனால் பாண்டியா புதிய அணியை தேடிக்கொண்டிருக்கிறார்.  க்ருனால் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஏலத்திற்கு வந்திருப்பதால், அவரை எந்த உரிமையாளர்கள் ஏலம் எடுக்கிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது. சகோதரர் ஹர்திக் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருப்பதால், அவர் அந்த அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த முறை ஏலத்தில் அதிக அடிப்படை விலையான ரூ.2 கோடியில் உள்ளார்.




மும்பை இந்தியன்ஸ் அணியில் க்ருனால் பாண்டியாவின் பங்கு


போட்டிகள் – 84 | ரன்கள் – 1143 | அதிக ரன்கள் – 86 | பேட்டிங் சராசரி – 22.86 | ஸ்ட்ரைக் ரேட் – 138.54 | விக்கெட்டுகள் – 51 | சராசரி – 7.36 | சிறந்த பந்துவீச்சு  - 3/14


ஏலத்திற்கான அடிப்படை விலை - 2 கோடி ரூபாய்