ஐபிஎல் மெகா வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல்நாள் ஏலம் நடைபெற்றது. அதில் 161 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கும், தீபக் சாஹர் 14 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அவர் தவிர மற்ற சில வீரர்களும் அதிக விலைக்கு எடுக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஏலம் இன்று தொடங்கியது.
இதில் முதலில் சர்வதேச பேட்ஸ்மேன்கள் செட் எடுக்கப்பட்டது. அதில் இந்திய வீரர் ரஹானேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. மற்றொரு இந்திய வீரர் புஜாராவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்