ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் இன்று நடக்கும் 21வது ஆட்டத்தில் பலம் மிகுந்த குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.


மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஹர்திக் பாண்ட்யா தலைமையில் அறிமுக அணியாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்ற அணிகளை எல்லாம் அச்சுறுத்தும் வகையில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த போட்டியில் பஞ்சாப் அணியை கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர் அடித்து ராகுல் திவேதியா வெற்றி பெற வைத்தது குஜராத் அணிக்கு மிகுந்த தன்னம்பிக்கை அளித்துள்ளது.




சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரையில் கடந்த தொடரைப் போலவே இந்த தொடரையும் மிகவும் மோசமாகவே தொடங்கினர். இருந்தாலும் கடந்த போட்டியில் சென்னை அணியை தோற்கடித்து தங்களது வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளனர். இதனால், சன்ரைசர்ஸ் அணியும் தங்களது வெற்றிக்கணக்கை தொடங்கும் முனைப்பிலே இன்று ஆடுவார்கள்.


குஜராத் அணி சரிசமமான கலவையாக அமைந்துள்ளது. தொடக்க வீரர் சுப்மன் கில் அருமையான பார்மில் உள்ளார். தொடர்ந்து அரைசதங்களாக விளாசி அணியின் வெற்றிக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். மேத்யூ வேடும் பார்முக்கு திரும்பினால் அருமையான தொடக்கம் குஜராத்திற்கு கிடைக்கும். கடந்த போட்டியில் வாய்ப்பு பெற்ற தமிழக வீரர் சாய் சுதர்சன் அருமையாக ஆடினர். இந்த போட்டியிலும் அவர் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். பந்துவீச்சில் முகமது ஷமி, ரஷீத்கான், பெர்குசன் உள்ளனர். இக்கட்டான நேரத்தில் ராகுல் திவேதியா அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்.




சன்ரைசர்ஸ் அணிக்கும் கேப்டன் வில்லியம்சனுடன் இணைந்து அபிஷேக் சர்மா அருமையான தொடக்கம் தர உள்ளார். அவர்களைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி, மார்க்ரம், அதிரடி வீரர் பூரண் உள்ளனர்.. பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் கட்டுக்கோப்பாக வீசி வருகிறார். புவனேஷ்குமார் நடராஜன், உம்ரான் மாலிக் ஆகியோரை நம்பிதான் ஹைதராபாத் பந்துவீச்சு உள்ளது.


ஹைதராபாத் அணியை காட்டிலும் குஜராத் பலமான அணியாக இருந்தாலும், ஹைதரபாத் தனது அனுபவத்தை இந்த போட்டியில் பயன்படுத்தி வெற்றி பெற முனைக்கும். தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் கம்பீரமாக வரும் குஜராத் அணி தனது வெற்றிப்பயணத்தை தொடரவே விரும்பும். இதனால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண