IPL 2022 Closing Ceremony: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை குஜராத்தில் நடைபெறுகிறது. இந்தப் இறுதிப் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டிக்கு முன்னதாக, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் தங்கள் பவர்-பேக் நிகழ்ச்சிகளால் இறுதி போட்டியை மறக்கமுடியாததாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறைவு விழா இந்திய நேரப்படி மாலை 6:25 மணிக்கு தொடங்கும். அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவின் போது 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக, ஐபிஎல் நிறைவு விழா ஆக்மென்டட் ரியாலிட்டியில் (ஏஆர்) ஒளிபரப்பப்படும். மொத்தம், 700க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
ஐபிஎல் 2022 நிறைவு விழா விவரங்கள் :
ஐபிஎல் 2022 நிறைவு விழா எப்போது நடைபெறுகிறது?
ஐபிஎல் 2022 நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே 29) மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் 2022 நிறைவு விழா எங்கு நடைபெறுகிறது?
ஐபிஎல் 2022 நிறைவு விழா அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஐபிஎல் 2022 நிறைவு விழாவை எங்கே பார்க்கலாம்?
ஐபிஎல் 2022 நிறைவு விழா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்டார் கோல்ட் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படும். விழாவின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையதளம் மற்றும் செயலியிலும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.
மேலும் இந்த விழாவில் 75 ஆண்டுகால இந்தியாவின் சுதந்திரத்தை கொண்டாடும் வகையிலும் விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய கிரிக்கெட் தொடர்பாகவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்