IPL Final 2023: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியின் போது பெய்த மழையினால் மைதானத்தில் தேங்கிய நீரை அகற்ற பிசிசிஐ எடுத்த முயற்சிகள் இணையவாசிகளால் சராமாரியான கருத்துக்களால் விமர்சிக்கப்படுகிறது. 


அகமதாபாத்தில் கனமழை பெய்து வருவதால், இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி 3 பந்து வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது. 


மழையால் பாதிப்பு:


16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமாதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை, காரணம் அதிகப்படியான மழை தான். இதனால் போட்டி மே 29ஆம் தேதி மாலை தொடங்கி 30ஆம் தேதி அதிகாலை வரை நடைபெற்றது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 214 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரின் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து 4 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது தொடங்கிய கனமழை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்ததால், போட்டி நிறுத்தப்பட்டது. 






ஸ்பாஞ்ச், ஹேர் ட்ரையர்:


இதனால் ஆடுகளத்தை விட்டு, வீரர்கள் வெளியேறினர். 20 நிமிடங்களுக்கு பெய்த கனமழையால் ஆடுகளம் மிக மோசமாக நனைந்தது. இதனால் மைதான பராமரிப்பாளார்கள் ஆடுகளத்தில் உள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மைதானப்பராமறிப்பாளர்கள், ஸ்பாஞ்ச், ஹேர் ட்ரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மைதானத்தில் இருந்த நீரை வெளியேற்றவும், மைதானத்தினை காயவைக்கவும் முயற்சித்து வந்தனர்.


இந்த காட்சிகள் நேரடி ஒளிபரப்பில் வெளியாக, இதனைப் பார்த்த, இணையவாசிகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை சராமாரியான கேள்விகளால் கேட்டு இணையத்தை நிரப்பி வருகின்றனர். அதில், உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியம் மழை நீரை வெளியேற்றும் நவீன முறை இது தானா? இதுவா டிஜிட்டல் இந்தியா? எனவும், வருடம் ரூ. 700 கோடிக்கு வருமானம் ஈட்டக்கூடிய தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் இருக்ககூடிய அதிநவீன கருவுகள் ஏன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இல்லை எனவும் கேள்வி எழுப்பி வருகிறனர். 






இந்த காட்சிகள் தொடர்பான, ஸ்கீர்ன் ஷாட்டுகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானம் மழையால் அங்கங்கு கூரையில் இருந்து கொட்டியது. இதனையே ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வந்தனர்.