ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டெல்லி அணி மோதி வருகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.


அதேசமயத்தில், இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் பெங்களூர் அணியுடன் சம புள்ளிகள் பெறும் டெல்லி ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதனால், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.


அதிரடியாக களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி அணி ஆரம்பத்திலேயே சொதப்பியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. டார் ஆர்டரை அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் நம்பிக்கை அளித்தார். அவர் 39 ரன்கள் எடுக்க, பவல் 43 ரன்கள் எடுக்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சரிந்து கொண்டிருந்த டெல்லி அணியை தூக்கி நிறுத்திய பவல், அணியின் ஸ்கோர் 150+ தாண்ட முக்கிய காரணமானார்.






மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, பும்ரா 3 விக்கெட்டுகளையும், ரமந்தீப் 2 விக்கெட்டுகளையும், மார்கண்டே, டானியல் சாம்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருக்கிறது டெல்லி அணி. 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண