சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகளை அதன் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது, அப்படி 2011 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி போட்டியை ஜெயிக்கவே வாய்ப்பில்லை என்று நினைத்து கொண்டிருந்த போட்டி ஆல்பி மோர்கல் விராட் கோலியின் பந்துவீச்சை புரட்டி எடுத்த போட்டிக்குறித்து இதில் காண்போம்.
ஐபிஎல் 2025:
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் வருகிற மார்ச் 21 ஆம் தேதி தொடங்க உள்ளது, இதற்கான ஏலம் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் இந்த சீசனுக்கான பயிற்சியை அனைத்து அணி வீரர்களும் தற்போது தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
CSK vs RCB:
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டிகளுக்கு அடுத்தப்படியாக ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இருக்கும், ஆனால் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் சென்னை அணியின் கையே ஓங்கி உள்ளது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் 34 முறை மோதியுள்ளன இதில் சென்னை அணி 22 போடிகளிலும் பெங்களூரு அணி 11 போட்டிகளிலும் ஒரு போட்டின் முடிவில்லாமல் முடிந்தது.
2012 ஆம் ஆண்டு:
இதில் 2012 ஆம் ஆண்டு நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின, இதில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஒவர்கள் முடிவில் 205 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் விராட் கோலி, கிறிஸ் கெய்ல் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர், அன்றைய காலத்தில் 200 ரன்கள் சேஸ் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது, அதுவும் சேப்பாக்கம் போன்ற ஆடுகளங்களில் 160 ரன்கள் அடித்தாலே பெரிய விஷயம் என்று சொல்வது உண்டு.
இப்படி இருக்கையில் 206 ரன்கள் ரன்களை சென்னை அணி சேஸ் செய்யுமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது, சேஸிங்கில் இறங்கிய சென்னை அணியில் முரளி விஜய் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ரெய்னா 23 ரன்களுக்கு வெளியேற டூ பிளிஸ்சில் மற்றும் தோனி வெற்றிக்காக போராட தொடங்கியது 14.3 ஒவரில் டூ பிளிஸ்சில் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற தோனி மற்றும் டுவைம் பிராவோ கையில் தான் ஆட்டம் உள்ளது என்கிற நிலைக்கு வந்தது. ஆனால் தோனி 41 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற சென்னை அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட்டது.
ஆல்பி மோர்கல் அதிரடி:
முக்கியமான 19 ஓவரை விராட் கோலியிடம் கொடுத்தார் பெங்களூரு கேப்டன் டேனியல் வெட்டோரி இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது, அப்போது முக்கியமான பவுலர்கள் அனைவரும் தங்களது ஓவர்களை வீசி முடித்த நிலையில் வினய் குமார், ராஜூ பாட்கல், விராட் கோலியிடமே ஓவர்கள் மீதமிருந்தது, வினய் குமார் இறுதி ஓவரை வீச வேண்டும் என்பதால் கோலியிடம் பந்தை கொடுத்தார் வெட்டோரி.
ஒரே ஓவரில் 28 ரன்கள்:
அந்த ஓவரின் முதல் பந்து எட்ஜ் வாங்கி பவுண்டரிக்கு செல்ல அடுத்தடுத்த பந்துகளை சிகசர் மற்றும் பவுண்டரி என அடித்து அந்த ஓவரில் 28 ரன்களை விளாசினார், சென்னை அணிக்கு இறுதி ஓவரில் 15 ரன்களே தேவைப்பட்டது, ஆல்பி மோர்கல் அந்த ஓவரில் ஆட்டமிழந்தாலும் சென்னை அந்த போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது. அன்று மோர்கலின் அதிரடிக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி பந்து வீசுவதே இல்லை.
ஆல்பி மோர்கல் கருத்து:
இந்த போட்டி குறித்து ஆல்பி மோர்கல் தெரிவிக்கையில் "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆட்டத்தை கையில் வைத்திருந்தது. விராட் ஏன் பந்து வீசினார் என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவர் எப்படியும் அந்த ஓவரை வீசியிருக்கக் கூடாது. 18வது ஓவரின் கடைசி பந்தில் நாங்கள் ஒரு விக்கெட்டை இழந்தோம்,"
எங்களுக்கு 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட்டது. நான் 7வது இடத்தில் களமிறங்கினேன். நீங்கள் ஸ்கோர்போர்டைப் பார்த்தால், அது சாத்தியமற்றது' என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நான் உள்ளே நுழைந்ததும், விராட் பந்துவீச போகிறார் என்பதை பார்த்ததும் சரியான இடத்தில் அடித்தால் ஒருவேளை இலக்கை நெருங்கி வரலாம்' என்று நினைத்தேன்,"
"நான் முதல் பந்தை 4 ரன்களுக்கு எட்ஜ் செய்தேன் என்று நினைக்கிறேன், அது என் ஸ்டம்புகளைத் தவறவிட்டது. அது ஷார்ட் தேர்ட் மேனைத் தாண்டிச் சென்றது. நான் நேராக அடிக்க ஆரம்பித்தேன், இறுதியில் நாங்கள் 28 ரன்கள் எடுத்தோம், அடுத்த ஓவரில் பிராவோ அடித்து போட்டியை வென்றோம். என்றார்.
இப்படி சென்னை அணியின் ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான போட்டியாகவும் யாரும் மறக்க முடியாத ஆட்டமாகவும் இது அமைந்தது.