IPL Auction 2026 Live Streaming: ஐபிஎல் 2026 தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் வரும் செவ்வாய்கிழமை (டிச.16) அன்று நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2026 மினி ஏலம்:
ஐபிஎல் 2026 ஏலத்திற்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அண்மையில் வெளியிட்டது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து இருந்தாலும், 350 பேர் மட்டுமே ஏலத்திற்குள் நுழைய தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முறை ஏலம் ஒரு நாள் மட்டுமே இருக்கும் என்பதால் இது மினி ஏலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் தங்களுக்கு பிடித்த அணியில் புதியதாக இணையப்போவது யார்? பழைய வீரர்கள் மீண்டும் அணியில் இணைவார்களா? என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் எந்த தேதியில், எந்த நேரத்தில் ஏலம் தொடங்கும். எந்த தொலைக்காட்சி மற்றும் செயலியில் நேரடி ஒளிபரப்பைப் பார்க்கலாம் என்பது போன்ற முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.
ஏலம் எங்கு நடைபெறும்?
இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது எடிஷனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறும். மொத்தம் 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். 40 வீரர்கள் ரூ.2 கோடி அடிப்படை விலையில் உள்ளனர். ரூ.30 லட்சம் அடிப்படை விலையில் 227 வீரர்கள் மினி ஏலத்தில் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிப்பார்கள். இந்த பட்டியலில் 16 இந்திய கிரிக்கெட் வீரர்களும் 96 வெளிநாட்டு சர்வதேச வீரர்களும் அடங்குவர். சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாதவர்களை பொறுத்தவரை, 224 இந்திய உள்நாட்டு வீரர்களும் 14 வெளிநாட்டினரும் உள்ளனர்.
ஐபிஎல் 2026 ஏலத்தில் உள்ள காலியிடங்கள்:
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு 350 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், ஏலத்தில் அதிகபட்சமாக 77 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. 10 ஐபிஎல் அணிகளில் மொத்தம் 77 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக கொல்கத்தா அணியில் 13 இடங்கள் காலியாக உள்ளன. அந்த அணி 12 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்கும் அணிகளில் அதிக கையிருப்பு கொண்ட அணியாகவும் திகழ்கிறது.
அணிகளிடம் உள்ள கையிருப்பு
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 13 காலியிடங்கள்- (ரூ. 64.3 கோடி)
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 9 காலியிடங்கள் - (ரூ. 43.4 கோடி)
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 10 காலியிடங்கள் - (ரூ. 25.5 கோடி)
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 6 காலியிடங்கள் - (ரூ. 22.95 கோடி)
- டெல்லி கேபிடல்ஸ் - 8 காலியிடங்கள் - (ரூ. 21.8 கோடி)
- குஜராத் டைட்டன்ஸ் - 5 காலியிடங்கள் - (ரூ. 12.9 கோடி)
- பஞ்சாப் கிங்ஸ் - 4 காலியிடங்கள் - (ரூ. 11.5 கோடி)
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 8 காலியிடங்கள் - (ரூ. 16.4 கோடி)
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 9 காலியிடங்கள் - (ரூ. 16.05 கோடி)
- மும்பை இந்தியன்ஸ் - 5 காலியிடங்கள் - (ரூ. 2.75 கோடி)
ஐபிஎல் 2026 ஏலம் எப்போது?
அடுத்த சீசனுக்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் 16, 2025 செவ்வாய்க்கிழமை நடைபெறும்.
ஐபிஎல் 2026 ஏலம் நடைபெறும் இடம்
இந்த முறையும் அபுதாபியில் ஒரு மினி ஏலம் நடைபெறும்.
ஐபிஎல் 2026 ஏலம் எப்போது தொடங்கும்?
ஐபிஎல் 2026 ஏலம் டிசம்பர் 16 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கும்.
ஐபிஎல் 2026 ஏலம் எந்த சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்?
ஐபிஎல் 19 ஏலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
ஏல நேரடி ஒளிபரப்பை எந்த செயலியில் பார்க்கலாம்?
ஐபிஎல் ஏல நேரடி ஒளிபரப்பு ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் வலைத்தளத்தில் ரசிகரள் கண்டுகளிக்கலாம்.