உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிகலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ஐ.பி.எல். தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டிற்கான ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் நேற்றும், இன்றும் நாளையும் ஏற்படுத்தி வருகிறது.
இரண்டு நாட்களில் இதுவரை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த பல வீரர்களை எதிர்பாராத பல அணிகள் தங்கள் வசம் இழுத்துள்ள நிலையில், உலக கிரிக்கெட்டில் கொடி கட்டிப் பறந்த பல வீரர்களை யாருமே ஏலத்தில் எடுக்கவில்லை.
இந்த நிலையில், இந்த இரண்டு நாட்களில் ஏலத்தில் விலை போகாத வீரர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.
பேட்ஸ்மேன்கள்:
- டேவிட் வார்னர் – 2 கோடி
- தேவ்தத் படிக்கல் – 2 கோடி
- கனே வில்லியம்சன் – 2 கோடி
- கிளென் பிலிப்ஸ் – 2 கோடி
- ரஹானே – 1.50 கோடி
- மயங்க் அகர்வால் – 1 கோடி
- ப்ரித்வி ஷா – 75 லட்சம்
பந்துவீச்சாளர்கள்:
- முஜீப் உர் ரஹ்மான் – 2 கோடி
- அடில் ரஷீத் – 2 கோடி
- அகில் ஹொசைன் – 1.50 கோடி
- கேசவ் மகாராஜ் – 75 லட்சம்
- பியூஷ் சாவ்லா – 50 லட்சம்
- கார்த்திக் தியாகி – 40 லட்சம்
ஆல் ரவுண்டர்கள்:
- ஷர்துல் தாக்கூர் – 2 கோடி
- டேரில் மிட்செல் - 2 கோடி
விக்கெட் கீப்பர்கள்:
- ஜானி பார்ஸ்டோ – 2 கோடி
- ஷாய் ஹோப் – 1.25 கோடி
- அலெக்ஸ் கேரி – 1 கோடி
- கே.எஸ்.பரத் – 75 லட்சம்
ஏலத்தில் விலை போகாத வீரர்களில் டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் அணிக்காக முதன்முறையாக கோப்பையை வென்று தந்த கேப்டன் ஆவார். இவர் மட்டுமின்றி வில்லியம்சன், மயங்க் அகர்வால், ரஹானே கேப்டன்களாக இருந்தவர்கள். ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், ஜானி பார்ஸ்டோ ஆட்டத்தையே மாற்றும் வல்லமை கொண்டவர்கள். குறிப்பாக, பார்ஸ்டோ அதிரடி மன்னனாக திகழ்பவர்.