துபாயில் நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களது அணிகளை பலபடுத்த வீரர்களை போட்டி போட்டு வாங்கி வருகின்றது. இதில் கொல்கத்தா அணி ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கை வாங்கியுள்ளது. மிட்ஷெல் ஸ்டார் ரூபாய் 24 கோடியே 75 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளார். இவரை வாங்க டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய அணிகள் ஆர்வம் காட்டின. அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன இரண்டாவது வீரர் என்றால் அது ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் தான். இவர் டூபாய் 20 கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் போனார். இவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. 


இந்நிலையில் இந்த ஏலத்தில் 5வது அட்டவணையில் இருந்த சர்வதேச போட்டிகளில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். மொத்தம் 6 வீரர்கள் களமிறங்கினர். இவர்களை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டாததால் அவர்கள் ஏலம் கேட்கப்படாத அல்லது விலை போகாத வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


ஏலம் போகாத சுழற்பந்து வீச்சாளர்கள்: 


முஜீப் ரஹ்மான் , அடில் ரஷித் , முகமது வக்கார் சலாம்கெயில் , தப்ரைஸ் ஷம்சி , இஷ் சோதி ஆகியோர். 


இவர்களில் தப்ரைஸ் ஷம்ஷி தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த வீரராவார். 


முஜீப் ரஹ்மான், முகமது வக்கார் சலாம்கெயில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவார். அடில் ரஷித் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அகேல் கொசைன் வெஸ்ட் இண்டீஸ் வீரராவார். அதேபோல் இஷ் ஷோதி நியூசிலாந்து அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளராவார்.