ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேமரூன் கிரீன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.17.50 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். அடிப்படை ஏலத் தொகை ரூ.2 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, ஆல்-ரவுண்டர் சாம் கர்ரனின் (இங்கிலாந்து) அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  


கேமரூன் கிரீன்
கேமரூன் டொனால்டு கிரீன் ஆஸ்திரேலிய 1999ஆம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பிறந்தார்.
2020 டிசம்பரில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமானார். டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 8 ஆட்டங்களில் விளையாடி 139 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டு அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.


அடிப்படை தொகையாக ரூ.2 கோடி பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரான, கேமரூன் கிரீனை ஏலத்தில் எடுக்க டெல்லி மற்றும் மும்பை இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ.17.5 கோடி தொகைக்கு மும்பை அணியால் கேமரூன் கிரீன் ஒப்பந்தம் செய்யமாட்டார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவது வீரர் எனும் பெருமையை கேமரூன் க்ரீன் பெற்றுள்ளார். முன்னதாக, அண்மையில் இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, வேகப்பந்து வீச்சாளராகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் கேமரூன் கிரீன் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.






சாம் கர்ரன் முன்பு ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிகளில் விளையாடியுள்ளார். முடிவில் சாம் கர்ரனை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.


கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கிராண்ட் ஹையர் ஹோட்டலில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்று வருகிறது.


ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 மற்றும் குறைந்தபட்சம் 18 வீரர்களைக் கொண்ட தங்கள் அணிகளை முடிக்க வேண்டும்.


முன்னதாக, 2021ல் கிறிஸ் மோரிஷ் ராஜஸ்தான் அணியால், ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலத்தொகையாக இருந்தது. முன்னதாக சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த சாம் கரன், பஞ்சாப் அணி மூலமாகவே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


யாரும் எதிர்பாராத விதமாக மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரானை லக்னோ அணி ரூ.16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீக்கெட் கீப்பர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் இவரை ஐதராபாத் அணி ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.