ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.


இந்நிலையில், இன்று தொடங்கிய மெகா ஏலத்தின் முதல் சுற்றில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா விலை போகவில்லை. இது ரெய்னா ரசிகர்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.




மேலும் படிக்க: IPL Mega Auction 2022 : அதே வீரர்களை அணியில் எடுக்கும் சிஎஸ்கே... விறுவிறுப்பாகும் ஐபிஎல் மெகா ஏலம்




ஐபிஎல் மெகா ஏலத்தில் மிகவும் எதிர்பார்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் டு ப்ளெஸியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆர்சிபி அணி 7 கோடி ரூபாய்க்கு வாங்கி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. அதே போல, ரெய்னாவையும் வாங்காமல் விட்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.


கடந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற முக்கிய காரணமாக இருந்தவர் டு ப்ளெஸி. ரிட்டென்சன் மூலம் சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால். அவரை தக்கவைக்கவில்லை. இருப்பினும், இந்த ஏலத்தில் அவரை மீண்டும் அணியில் எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டும் எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயத்தில், பாப் டுப்ளிசிசை மும்பை அணி, பெங்களூர் அணி, ஹைதரபாத் அணி புதியதாக களமிறங்கியுள்ள லக்னோ, குஜராத் அணிகளும் வாங்க ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவரது ஆரம்ப விலை 2 கோடி இருந்தது. தற்போது, அவரை 7 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வாங்கியுள்ளது. 










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண