ஐபிஎல் 2026-க்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் அதற்கான செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், ஒவ்வொரு அணியும் தாங்கள் ரிட்டெய்ன் செய்த வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது.
இதில், அதிர்ச்சி தரும் விதமாக பல வீரர்களை ஒவ்வொரு அணி நிர்வாகமும் நீக்கியுள்ளனர். அப்படி அதிர்ச்சி தந்த நீக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை காணலாம்.
சென்னை:
1. ஜடேஜா 2. பதிரானா 3. ரச்சின் ரவீந்திரா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 12 வீரர்கள் கழட்டிவிடப்பட்டுள்ளனர். அவர்களில் ஜடேஜா-வை அணி நிர்வாகம் நீக்கியது மொத்த ஐபிஎல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாம்சனை வாங்கிக் கொண்டு அவரை ராஜஸ்தான் அணியுடன் மாற்றிக் கொண்டுள்ளது சென்னை அணி நிர்வாகம். மீண்டும் பதிரானா, ரவீந்திராவை இந்த முறை ஏலத்தில் எடுப்பது சந்தேகம் என்றே கருதப்படுகிறது.
டெல்லி:
1. ஃபாப் டுப்ளிசிஸ் 2. ப்ரெஸர் மெக்குர்க்
அதிரடி பேட்ஸ்மேன் டுப்ளிசிஸ் 40 வயதை நெருங்கியதால் அவர் நீக்கப்பட்டுள்ளார். ப்ரெஸர் மெக்குர்க் அதிரடி இளம் பேட்ஸ்மேன். அவரை அணியில் இருந்து விடுவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. டெல்லி அணியில் 7 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்:
1. ரூதர்ஃபோர்ட்,
குஜராத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரூதர்ஃபோர்ட். இவர் மும்பைக்கு ட்ரேட் செய்யப்பட்டுள்ளார். குஜராத் அணியில் 6 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா:
1. ரஸல் 2. வெங்கடேஷ் ஐயர்
கொல்கத்தாவின் அதிரடி ஆல்ரவுண்டர் ரஸல் நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சி. கொல்கத்தா 2024 கோப்பை வெல்ல காரணமாக இருந்த வெங்கடேஷ் ஐயரும் கழட்டிவிடப்பட்டுள்ளார். 6 வீரர்களை கொல்கத்தா விடுவித்துள்ளது.
லக்னோ:
1. டேவிட் மில்லர் 2. ஷர்துல் தாக்கூர் 3. ரவி பிஷ்னோய்
டேவிட் மில்லர் தனது பேட்டிங்கால் மொத்த ஆட்டத்தையும் மாற்றும் ஆற்றல் கொண்டவர். ஷர்துல் தாக்கூர் சிறப்பான ஆல்ரவுண்டர். பிஷ்னோய் சுழல் சாம்ராஜ்யம் செய்பவர். லக்னோ 8 வீரர்களை விடுவித்துள்ளது.
மும்பை:
1. விக்னேஷ் புத்தூர் 2. முஜீப் உர் ரஹ்மான் 3. அர்ஜுன் டெண்டுல்கர்
இளம் வீரரான விக்னேஷ் புத்தூரில் கடந்த ஐபிஎல்லில் சுழலில் ஜொலித்தவர். முஜுப் சுழலில் அசத்தும் திறன் கொண்டவர். சச்சினின் மகன் அர்ஜுன் மாற்றப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியம்தான். மும்பை 9 வீரர்களை விடுவித்துள்ளது.
பஞ்சாப்:
1. இங்கிலிஷ் 2. மேக்ஸ்வெல்
கடந்த சீசனில் பஞ்சாப் இறுதிப்போட்டி வரை செல்ல முக்கிய காரணம் இங்கிலிஷ் ஆவார். மேக்ஸ்வெல் கடந்த சில சீசன்களாக சொதப்பினாலும் அவர் மொத்த ஆட்டத்தையும் மாற்றும் பேட்ஸ்மேன். பஞ்சாப் 4 வீரர்களை விடுவித்துள்ளது.
ராஜஸ்தான்:
1. சஞ்சு சாம்சன் 2. நிதிஷ் ராணா
ராஜஸ்தான் கேப்டனாக கலக்கிய சாம்சன் சென்னைக்கு வந்துள்ளார். ராஜஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ராணா டெல்லிக்கு சென்றுள்ளார். ராஜஸ்தான் மொத்தம் 4 வீரர்களை விடுவித்துள்ளது.
பெங்களூர்:
1. சுவஸ்திக் சிக்காரா 2. லிவிங்ஸ்டன் 3. டிம் செய்ஃபெர்ட்
சிக்காரா இளம் அதிரடி பேட்ஸ்மேன். அவரை வெட்டியெடுக்காத வைரம் என்று தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார். லிவிங்ஸ்டன் ஆல்ரவுண்டர். செய்ஃபெர்ட் அதிரடி பேட்ஸ்மேன். 8 வீரர்களை ஆர்சிபி விடுவித்துள்ளது.
ஹைதரபாத்:
1. முகமது ஷமி 2. ராகுல் சாஹர்
வேகப்பந்துவீச்சாளர் ஷமி விடுவிக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சி. ராகுல் சாஹர் சுழலில் அசத்தும் ஆற்றல் கொண்டவர். 7 வீரர்களை சன்ரைசர்ஸ் விடுவித்துள்ளது.