இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் சூழல் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2025 சீசனில் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது. இது வரை 58 லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில் இன்று 59வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் பெங்கள்ளூரு அணிகள் மோதவுள்ளன, இதுவரை ஒரு அணி கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த நிலையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அசாதரண சூழல் ஆகியவற்றின் காரணமாக மீதவுள்ள ஐபிஎல் தொடர் ஒருவாரத்துக்கு ரத்து செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

நேற்றையை போட்டி: 

நேற்று தர்ம்சலாவில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிக்கு எதிரான போட்டி ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் காரணமாக ஆட்டாமானது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் வீரர்கள் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஐபிஎல் அணி வீரர்களும் பலத்த பாதுக்காப்புடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் தர்ம்சாலா மைதானம் மூடப்பட்டு உள்ளதால் வீரர்களை பாதுக்காப்பாக ரயில்கள் மூலம் மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

அடுத்தது என்ன?

ஐபிஎல் போட்டிகள் இப்படி தள்ளிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல ஏற்கெனவே கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்காரணமாக ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக 2021 ஆம் ஆண்டு தொடர் பயோ பபுள் முறையில் நடந்தாலும் தொடரின் பாதியிலேயே வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டது, அதனால் தொடரானது ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. 

ஏற்கெனவே பாகிஸ்தான் பீரிமியர் லீக் தொடர் போரினால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது, அதனால் இந்தியாவால் உடனடியாக அங்கு போட்டிகளை நடத்தமுடியாது என தெரிகிறது.