சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் 2025 போட்டியின் போது இஷான் கிஷான் விக்கெட்டானது மிகப்பெரிய  சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை விமர்சனம் செய்து வருகின்றனர். 

நேற்றை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  சன்ரைசர்ஸ் அணியின் மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் இது சம்பவம் நடந்தது. தீபக் சாஹரின் வீசிய பந்து லெக் சைடில் சாய்ந்து விக்கெட் கீப்பர் எம்ஐ ரியான் ரிக்கிள்டனால் பிடிக்கப்பட்டது. நடுவர்கள் சைகை காட்டாமல் அது வைட் என்று கூற கையை நகர்த்தினார், ஆனால், அப்போது, ​​இஷான் கிஷான் நடக்கத் தொடங்கினார். இருப்பினும், அவர் பாதியிலேயே நிறுத்தினார். அப்போதுதான் மும்பை வீரர்கள் கேட்ச் என்று அம்பயரிடம் கேட்டார்கள். கையை ஓரளவு உயர்த்திய நடுவர் கிஷன் அவுட் என்று அறிவித்தார். 

பின்னர், அல்ட்ராஎட்ஜ் ரீப்ளேவில் பந்து பேட்டில் படாமல் சென்றது தெளிவாக தெரிந்தது, ஆனால் இந்த சம்பவ சமூக வளைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியது. இந்த சம்பவம் மிகவும் வினோதமாக இருந்ததால், இதுபோன்ற எதையும் நாங்கள் பார்த்ததில்லை என்று வர்ணனையாளர்கள் கூறினர். 

மும்பை அணிக்கு ஆதரவா?

இந்த சம்பவத்துக்கு பிறகு பிற அணி ரசிகர்கள் அம்பயர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக தங்கள் விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் கிஷன் ஏன் அவுட் கொடுக்கமலே நடந்து செல்ல வேண்டும் உங்க நேர்மைக்கு ஒரு அளவு இல்லையா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்

இந்தப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.