IPL 2025 RR vs PBKS: பஞ்சரான பஞ்சர்! ராஜஸ்தான் ராஜ வெற்றி! பவுலிங்கில் பட்டையை கிளப்பிய சஞ்சு பாய்ஸ்!
IPL 2025 RR vs PBKS: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IPL 2025 RR vs PBKS: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி சண்டிகரில் இன்று நடந்தது. இதில், முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வால், சாம்சன், பராக் அதிரடியால் 205 ரன்களை குவித்தது. இதையடுத்து, 206 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
206 ரன்கள் டார்கெட்:
போட்டியைத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. பிரியன்ஷ் ஆர்யா முதல் பந்திலே டக் அவுட்டாக பஞ்சாப் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பிரப்சிம்ரன் - ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி காட்ட முயற்சிக்க முதல் ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார். அவர் 5 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்தில் போல்டானார்.
Just In




நேகல் வதோரா மிரட்டல்:
அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 1 ரன்னில் அவுட்டாக, தொடக்க வீரர் பிரப்சிம்ரன் 16 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 17 ரன்களுக்கு அவுட்டாக 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பஞ்சாப் இழந்தது. இதையடுத்து, நேகல் வதோரா ஆட்டத்தை பஞ்சாப் பக்கம் கொண்டு வர போராடினர். மேக்ஸ்வெல்லை மறுமுனையில் வைத்துக்கொண்டு அவர் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.
சில பந்துகள் நிதானம் காட்ட பின்னர் அதிரடிக்கு மாறினார். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாச பஞ்சாப் ரன் எகிறியது. இதனால், பஞ்சாப் ஓவருக்கு 9 ரன்கள் வீதம் ஆடியது. மேக்ஸ்வெல்லும் பவுண்டரி, சிக்ஸர் விளாசி அதிரடிக்கு மாற முயற்சிக்க 21 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்து அவுட்டாக, அவர் ஆட்டமிழந்த சில நொடிகளில் அதிரடி காட்டிய நேகல் வதோரா அவுட்டானார்.
பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்:
அவர் 41 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்னர், சுயான்ஷ் ஷெட்கே 2 ரன்னில் அவுட்டானார். ஆர்ச்சர், ஹசரங்கா, சந்தீப் சர்மா, தீக்ஷனா பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர். கடைசி 18 பந்துகளில் 64 ரன்கள் பஞ்சாப் வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆனால், தீக்ஷனாவின் பந்தில் யான்சென் 3 ரன்னில் அவுட்டானார். ஷஷாங்க் சிங் அதிரடி காட்ட முயற்சித்தும் ராஜஸ்தான் பந்துவீச்சும், ஃபீல்டிங்கும் வலுவாக இருந்தது.
ராஜஸ்தான் வெற்றி:
கடந்த போட்டிகளில் சொதப்பலாக வீசிய ஆர்ச்சர் இன்றைய போட்டியில் சிறப்பாக வீசி ஃபார்முக்கு திரும்பினார். சந்தீப் சர்மா மிகவும் நேர்த்தியாக வீசினார். அவர் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். தீக்ஷனா 4 ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆர்ச்சர் சிறப்பாக வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசியில் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சந்தீப் சர்மா மற்றும் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளையும், கார்த்திகேயா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.