IPL 2025 RR vs PBKS: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி இன்று சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஜெய்ஸ்வால் - சாம்சன் அதிரடி:
இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் - சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக ஆட்டத்தை தொடர்ந்தனர். இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடினார். குறிப்பாக, கடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடாத ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் அதிரடி காட்டினார். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாச சாம்சன் மறுமுனையில் நிதானத்துடன் அதிரடி காட்டினார். இதனால், ஓவருக்கு 9 ரன்கள் வீதம் ராஜஸ்தான் ரன்ரேட் சென்றது.
அதிரடியாக இருவரும் ஆடிக்கொண்டிருந்தபோது பெர்குசன் பந்தில் சாம்சன் அவுட்டானார். மீண்டும் இன்று கேப்டனா களமிறங்கிய சாம்சன் 26 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்பு ரியான் பராக் - ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி அதிரடியாக ஆடியது.
ஜெய்ஸ்வால் மிரட்டல்:
ரியான் பராக் - ஜெய்ஸ்வால் ஜோடியும் ஆட்டத்தை அதிரடியாக கொண்டு சென்றது. அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசினார். தொடர்ந்து ஜெட் வேகத்தில் சென்ற ராஜஸ்தான் ரன் வேகத்தை பஞ்சாப்பின் பெர்குசன் கட்டுப்படுத்தினார். 45 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 5 சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் பெர்குசன் பந்தில் ஜெய்ஸ்வால் போல்டானார்.
ஆனாலும, அடுதது ஜோடி சேர்ந்த ரியான் பராக் - ஹெட்மயர் ஜோடி அடித்து ஆடியது. ரியான் பராக் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். இதனால், 150 ரன்களை கடந்தும் ராஜஸ்தான் அணி அதிரடி காட்டியது. அர்ஷ்தீப் சிங், ஜான்சென், பெர்குசன், சாஹல், ஸ்டோய்னிஸ் வீசியும் ராஜஸ்தான் அதிரடி காட்டியது.
206 ரன்கள் டார்கெட்:
கடைசியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 205 ரன்களை எடுத்தது. கடைசி கட்டத்தில் துருவ் ஜோரல் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். ஜான்சென் 45 ரன்களையும், ஸ்டோய்னிஸ் 48 ரன்களையும், சாஹல் 3 ஓவர்களில் 32 ரன்களையும் வாரி வழங்கினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணிக்கு 206 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.