IPL 2025 RCB Vs DC: நடப்பு தொடரில் டெல்லி அணியிடம் கண்ட தோல்விக்கு பெங்களூரு அணி பதிலடி கொடுத்துள்ளது.
டேபிள் டாப்பில் ஆர்சிபி:
ஐபிஎல் தொடரின் நேற்றைய இரண்டாவது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியில் டாப்-ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும் கோலி மற்றும் க்ருணால் பாண்ட்யா நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டனர். கோலி 51 ரன்களும், க்ருணால் இறுதிவரை ஆடமிழக்காமல் 73 ரன்களும் சேர்த்தனர். இதனால், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆர்சிபி அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. நடப்பு தொடரில் டெல்லி அணியிடம் கண்ட தோல்விக்கு பெங்களூரு அணி பதிலடி கொடுத்துள்ளது.
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் 2025:
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமன் | ரன்ரேட் | புள்ளிகள் |
| ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 10 | 7 | 3 | 0 | 0.521 | 14 |
| குஜராத் டைட்டன்ஸ் | 8 | 6 | 2 | 0 | 1.104 | 12 |
| மும்பை இந்தியன்ஸ் | 10 | 6 | 4 | 0 | 0.889 | 12 |
| டெல்லி கேபிடல்ஸ் | 9 | 6 | 3 | 0 | 0.482 | 12 |
| பஞ்சாப் கிங்ஸ் | 9 | 5 | 3 | 1 | 0.177 | 11 |
| லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 10 | 5 | 5 | 0 | -0.325 | 10 |
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 9 | 3 | 5 | 1 | 0.212 | 7 |
| சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 9 | 3 | 6 | 0 | -1.103 | 6 |
| ராஜஸ்தான் ராயல்ஸ் | 9 | 2 | 7 | 0 | -0.625 | 4 |
| சென்னை சூப்பர் கிங்ஸ் | 9 | 2 | 7 | 0 | -1.302 | 4 |
திருப்பிக் கொடுத்த கோலி:
முன்னதாக சின்னசுவாமி மைதானத்தில் பெங்களூருவை வீழ்த்தியபோது டெல்லி வீரர் கே.எல். ராகுல், இந்த மைதானத்தில் மன்னர் தான் என்பதை போல ஒரு சைகை செய்து இருந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊர் மைதானத்தில் டெல்லியை வீழ்த்திய பெங்களூரு வீரர் கோலியும், நேற்றைய போட்டி முடிந்த பிறகு கே.எல். ராகுல் செய்ததை போன்று செய்து காட்சி கிண்டலடித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
எட்டிப்பிடிக்குமா குஜராத்?
ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள லீக் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. குஜராத் அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலும் உள்ளது. குஜராத் இன்று வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும். அதேநேரம், ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் 8வது இடத்திற்கு முன்னேறக்கூடும். குஜராத் அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி மட்டுமே கண்டுள்ளது.