சர்வதேச கிரிக்கெட் உலகில் விராட் கோலி ரன்மெஷின் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடித்த ஒரே வீரராக உலா வருகிறார். இந்திய அணியின் வெற்றிக்காக பல போட்டிகளில் தனி ஆளாக போராடியுள்ளார்.
விராட் கோலிக்கு மிகவும் பிடித்த பாட்டு எது?
ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரரமாக திகழும் விராட் கோலியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது, அவரிடம் உங்களுக்கு இப்போது மிகவும் பிடித்த பாடல் எது தெரியுமா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு விராட் கோலி, இப்போது எனக்கு மிகவும் பிடித்த பாடல் எது என்று கூறினால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நீ சிங்கம்தான் பாடல்தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆகும் என்று கூறினார்.
சிம்பு படம்:
இந்த பாடல் நடிகர் சிம்பு நடித்த பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ளது. ஒபிலி கிருஷ்ணா இயக்கிய இந்த படம் கடந்த 2023ம் ஆண்டு ரிலீசானது. இந்த படத்தில் சிம்பு மிகப்பெரிய கோடீஸ்வரனாகவும், தாதாவாகவும் நடித்திருப்பார். கன்னடத்தில் வெளியான முஃப்தி படத்தின் ரீமேக் ஆகும். கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்த முஃப்தி படம் தமிழில் சுமாரான வெற்றியே பெற்றது. விராட் கோலியின் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
விராட் கோலி தனக்கு பிடித்த பாடல் என்று குறிப்பிடும் இந்த நீ சிங்கம்தான் பாடலை கிரிக்கெட் வீரர்களான தோனி, கோலி, ரோகித் போன்ற மிகப்பெரிய வீரர்களுக்கு சமர்ப்பிக்கும் விதமாக ரசிகர்கள் எடிட் செய்து வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர்.