ஐபிஎல் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் குவாலிஃபயர் 1ல் ஆடப்போகும் அணி எந்த அணி? என்று தற்போது வரை தெரியவில்லை.

குவாலிஃபயருக்கு செல்லப்போவது யார்?

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கே குவாலிஃபயர் போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும். தோற்கும் அணி எலிமினேட்டர் போட்டியில் ஆடும் நிலைக்குத் தள்ளப்படும். ஒருவேளை எலிமினேட்டர் போட்டியில் தோற்றால் தொடரை விட்டே வெளியேற வேண்டிய நிலை உண்டாகும். 

சேசிங்கைத் தேர்வு செய்த பஞ்சாப்:

இந்த பரபரப்பான சூழலில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயர் சேசிங்கைத் தேர்வு செய்துள்ளார். 

ப்ளேயிங் லெவன்:

பஞ்சாப் அணியில் ப்ரியன்ஷ் ஆர்யா, இங்கிலிஷ், ஸ்ரேயாஸ் ஐயர், நேகல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜான்சென், ப்ரார், ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷஹ்தீப் சிங்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன்தீர், சான்ட்னர், தீபக் சர்மா, போல்ட், பும்ரா உள்ளனர்.

பேட்டிங் - பவுலிங்:

மும்பை அணியில் ரோகித் சர்மா, ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன்தீர் என மிகப்பெரிய பேட்டிங் பட்டாளமே உள்ளனர். இதனால், இந்த பேட்டிங் பட்டாளம் இன்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா? என்று மும்பை ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இமாலய இலக்கை நிர்ணயிக்க மும்பை பேட்டிங் படை ஆர்வம் காட்டும்.

இந்த மும்பை பேட்டிங் படைக்கு பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர். அர்ஷ்தீப் சிங், ஜான்சென், ஓமர்சாய், ஸ்டோய்னிஸ், ப்ரார் பந்துவீச்சில் அசத்தினால் மும்பைக்கு நிச்சயம் நெருக்கடி உண்டாகும். 

அதேபோல, பஞ்சாப் அணியிலும் இலக்கை அடைய ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலிஷ், நேகல் வதேரா, ஷஷாங்க் சிங், ஸ்டோய்னிஸ் உள்ளனர். இவர்கள் அதிரடி காட்டினால் நிச்சயம் பஞ்சாப்பிற்கு வெற்றி. பஞ்சாப்பிற்கு மிகப்பெரிய தலைவலியாக பும்ரா, போல்ட், தீபக் சாஹர், சான்ட்னர், பாண்ட்யா உள்ளனர். 

குவாலிஃபயர் 1 போட்டியில் ஆடவே இரு அணிகளும் ஆர்வம் காட்டும் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறவே இரு அணிகளும் முனைப்பு காட்டும்.