IPL 2025 PBKS Vs KKR: ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த இலக்கை நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.

பஞ்சாப் அணி வரலாற்று வெற்றி:

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி வெறும் 111 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. மிக எளிமையாக இந்த இலக்கை கொல்கத்தா அணி இலகுவாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர்கள் களத்தில் மேஜிக் செய்து காட்டினர். நிகழ்வது என்னவென்றே புரியாமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்து கொல்கத்தா வீரர்கள் பெவிலியன் திரும்பினர். இதனால் வெறும் 95 ரன்களுக்கே அந்த அணி ஆட்டமிழந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அதன்படி, ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த இலக்கை நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது. மேலும், மிகக் குறைந்த இலக்கை நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற, சென்னையின் 17 வருட சாதனையையும் முறியடித்துள்ளது.

குறைந்த இலக்கை நிர்ணயித்தும் வெற்றி பெற்ற அணிகள்:

எண் அணிகள் ஸ்கோர் எதிரணி முடிவு தேதி
1 பஞ்சாப் கிங்ஸ் 111/10 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிபிகேஎஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 15 ஏப்ரல், 2025
2 சென்னை சூப்பர் கிங்ஸ் 116/9 கிங்ஸ் லெவன் பஞ்சாப் CSK 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 20 மே 2009
3 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 118 தமிழ் மும்பை இந்தியன்ஸ் SRH 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 24 ஏப்ரல் 2018
4 கிங்ஸ் லெவன் பஞ்சாப் 119/8 மும்பை இந்தியன்ஸ் KXIP 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 20 ஏப்ரல் 2009
5 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 119/8 புனே வாரியர்ஸ் SRH 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 17 ஏப்ரல் 2013
6 மும்பை இந்தியன்ஸ் 120/9 (அக்டோபர் 120) புனே வாரியர்ஸ் MI 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 3 மே 2012
7 பஞ்சாப் கிங்ஸ் 125/7 சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிபிகேஎஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 25 செப்டம்பர் 2021
8 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 126/8 சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 21 மே 2008
9 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 126/6 புனே வாரியர்ஸ் SRH 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 5 ஏப்ரல் 2013
10 கிங்ஸ் லெவன் பஞ்சாப் 126/7 சன்ரைசர்ஸ் ஐதராபாத் KXIP 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 24 அக்டோபர் 2020

வேட்டையாடிய சாஹல்:

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா ஆரம்பத்தில் சற்றே தடுமாறினாலும், ரகுவன்ஷி மற்றும் ரகானே பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தனர். அப்போது பந்துவீச்சை தொடங்கிய சாஜல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய அவர் ரகானே, ரகுவன்ஷி, ரிங்கு சிங் மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து, போட்டியை பஞ்சாப் அணிக்கு சாதகமாக மாற்றினார். அதன்படி,அவர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

அதிகபட்ச சேஸிங்:

மறுமுனையில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக எட்டிப்பிடித்த அணி என்ற பெருமையையும் பஞ்சாப் அணியே கொண்டுள்ளது. சுவாரஸ்யமாக அந்த சாதனியையும் கொல்கத்தா அணிக்கு எதிராகவே கடந்த ஆண்டு நிகழ்த்தியுள்ளது. ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை பஞ்சாப் அணி எட்டிப்பிடித்து வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.