IPL 2025 MI Vs GT: ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான நேற்றைய லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

டெல்லியை காப்பாற்றிய மழை:

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி,ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.அசுதோஷ் சர்மா மற்றும் ஸ்டப்ஸின் போராட்டத்தில் டெல்லி அணி 20 வர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்தது. இந்த எளிய இலக்கை எட்டி, தங்களது பிளே-ஆஃப் வாய்ப்பை நீட்டிக்க ஐதராபாத் அணி ஆர்வமாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பாகவே மழை குறுக்கிட்டது.

வெளியேறிய ஐதராபாத்:

சற்று இடைவெளிவிட்டாலும் 5 ஓவர்கள் போட்டியை நடத்தவும் தயாராக இருந்த நிலையில்,மழைொடர்ந்து பெய்ததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால், 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்வி மற்றும் ஒரு போட்டி சமனில் முடிந்ததன் விளைவாக, ஐதராபாத் அணி நடப்பு தொடருக்கான பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அதேநேரம், டெல்லி அணி 13 புள்ளிகளுடன் டெல்லி அணி 5வது இடத்தில் தொடர்கிறது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் 2025:

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 8 3 16 0.482 
பஞ்சாப் கிங்ஸ் 11 7 3 15 0.376 
மும்பை இந்தியன்ஸ் 11 7 4 14 1.274 
குஜராத் டைட்டன்ஸ் 10 7 3 14 0.867
டெல்லி கேபிடல்ஸ் 11 6 4 13 0.362 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11 5 5 11 0.249)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 11 5 6 10 -0.469
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  11 3 7 7 -1.192
ராஜஸ்தான் ராயல்ஸ் 12 3 9 6 -0.718 
சென்னை சூப்பர் கிங்ஸ் 11 2 9 4 -1.117

குஜராத் Vs மும்பை பலப்பரீட்சை:

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை தலா 7 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறக்கூடும் என்பதால், இரு அணிகளும் வெற்றி பெற கடும் தீவிரம் காட்டுகின்றன. அதோடு, நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கவும் மும்பை அணி தயாராகி வருகிறது.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் குஜராத் அணி 4 முறையும், மும்பை அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் குஜராத் அணி அதிகபட்சமாக 233 ரன்களையும், மும்பை அணி குறைந்தபட்சமாக 152 ரன்களையும் பதிவு செய்துள்ளது.

டேபிள் டாப்பர் யார்?                                                                

தொடர் தோல்விகள் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் வாய்ப்பை சென்னை, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் இழந்துள்ளன. எனவே, முதல் நான்கு இடங்களுக்கான போட்டியில் தற்போது 7 அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன. பெங்களூரு அணி 8 போட்டிகளில் வென்று வலுவான நிலையில் இருக்க, பஞ்சாப், மும்பை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் 14 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில், பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய தீவிரம் காட்டி வருகின்றன. வலுவான ரன்ரேட் காரணமாக இன்றைய போட்டியில் மும்பை மற்றும் குஜராத்தில் ஆகியவற்றில் எது வென்றாலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவதோடு, கிட்டத்தட்ட பிளே-ஆஃப் வாய்ப்பையும் உறுதி செய்து விடலாம்.