குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் சிறப்பான பேட்டிங்கால் 196 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தது. இதுமட்டுமன்றி, பந்துவீச்சிலும் சிறப்பாக வீசி மும்பையை திணறிடித்து, வெற்றிக்கனியை பறித்தது குஜராத் அணி.

ஐபிஎல் 9வது போட்டி:

2025ஆம் ஆண்டு ஐபிஎல்லின் 9ஆவது போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது, குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.  இதில், டாஸ் வென்ற மும்பை அணியானது, பந்துவீச்சை தேர்வு செய்தது.

குஜராத் அணி விவரம்: 

சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக் கான், ராகுல் திவேதியா, சாய் கிஷோர், ஷெர்பேன் ரூதர்போர்ட், ரஷித் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

மும்பை அணி விவரம்:

ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், சத்தியநாராயண ராஜு, முஜீப் உர் ரஹ்மான்.

Also Read: நல்லா இருக்கே! கிப்லி படத்தில் ஸ்டாலின், விஜய்...ChatGPT, Grok AI மூலம் எப்படி உருவாக்குவது?

குஜராத் 196-8:

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியானது, 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில், 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. குறிப்பாக, சுப்மன் கில், ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன் ஆகிய மூவரும் சிறப்பாக விளையாடினர். மும்பை அணி சார்பில் அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசினார்.அதிரடியாக விளையாடிய கில் 38 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர், 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த பட்லர், முஜீப் உர் ரஹ்மான் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இருப்பினும், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுதர்சன் 63 ரன்கள் எடுத்து, தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

Also Read: கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?

மும்பை 160-6

இதையடுத்து, பேட்டிங் செய்த மும்பை அணி, ரோகித் சர்மா 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து சிராஜ் பந்தில் அவுட்டானார். ரியான் 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து சிராஜ் பந்தில் அவுட்டானார். அடுத்து திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை ஏற்றினர். 10 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 36 பந்துகளில் 38 ரன்களில் திலக் வர்மா அவுட்டானார். இதையடுத்து அதிரடியாக ஆடி வந்த சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது, மும்பைக்கு பெருத்த அடியாக அமைந்தது. அடுத்து வந்த பாண்டியா 17 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ரபாடா பந்துவீச சிராஜ் கேச்சில் அவுட்டானார்.  இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் இழந்து தோல்வியை தழுவியது மும்பை அணி. இந்நிலையில், இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி,சற்று பின்னடைவில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

Also Read: Solar Eclipse: பகலை இருளாக்கும் நிலவு! இன்று வருடத்தின் முதல் சூரிய கிரகணம்!

முக்கிய 3 விக்கெட்டுகளை தூக்கிய சிராஜ்:

குஜராத் அணியின் பந்துவீச்சில், சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 4 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இத்துடன் முக்கியமான விக்கெட்டான ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிகெல்டன் ஆகிய ஓபனிங்க் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை தூக்கியது, மும்பை அணியை ஆரம்பத்திலேயே மட்டுப்படுத்தியது. இதுமட்டுமன்றி ரபாடா பந்தில் பாண்டியா அடிக்க, அதன் கேட்சையும் சிராஜ் பிடித்தார். இந்நிலையில், முக்கியமான 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு பலமாக அமைந்தார் முகமது சிராஜ்.