IPL 2025 GT vs DC: ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத்தில் நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த தாெடரைப் பொறுத்தவரை இரு அணிகளும் பலமிகுந்த அணிகளாக திகழ்கிறது. 

டெல்லி முதலில் பேட்டிங்:

டாஸ் வென்ற அணி குஜராத் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து, டெல்லி அணி முதலில் பேட் செய்கிறது. குஜராத் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில், பட்லர், சுதர்சன், ரூதர்ஃபோர்டு, ஷாருக்கான் ஆகியோர் உள்ளனர். 

இவர்கள் ஏதுவான அதிரடியை காட்டினால் குஜராத் அணி வலுவான ரன்களை குவிக்கும். அதேபோல, டெல்லி அணியைப் பொறுத்தவரையில் ஜேம்ஸ், அபிஷேக் போரல், கருண் நாயர், ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, கே.எல்.ராகுல், விப்ராஜ் ஆகியோர் சிறப்பாக ஆடினால் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

பந்துவீச்சு மிரட்டல்:

பந்துவீச்சைப் பொறுத்தவரையிலும் இரு அணிகளும் மிகவும் பலமாக உள்ளது. குஜராத் அணியைப் பொறுத்தவரையில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா ஆகியோர் வேகத்தில் மிரட்ட தயாராக உள்ளனர். சுழலில் வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ரஷீத்கான் உள்ளனர். இவர்கள் பந்துவீச்சில் மிரட்டினால் டெல்லிக்கு சிக்கல் ஆகும். 

அதேபோல, டெல்லியில் ஸ்டார்க்,  மோகித் சர்மா, முகேஷ்குமார் வேகத்தில் கலக்கத் தயாராக உள்ளனர். விப்ராஜ், குல்தீப், அக்ஷர் படேல் சுழலில் மிரட்ட தயாராக உள்ளனர். 

ப்ளேயிங் லெவன்:

குஜராத் அணியில் சாய் சுதர்சன், சுப்மன்கில், பட்லர், ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷீத்கான், அர்ஷத்கான், சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா. 

டெல்லி அணியில் அபிஷேக் போரல், கருண் நாயர், கே.எல்.ராகுல், ஸ்டப்ஸ், அக்ஷர் படேல், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம், ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் களமிறங்கினர்.