18வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் முதல் அணியாக ஆர்சிபி காலடி எடுத்து வைத்துள்ளது. இதையடுத்து, ஆர்சிபியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் குவாலிஃபயர் 2ம் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. 

Continues below advertisement

மும்பையை அச்சுறுத்தும் மழை:

இந்த போட்டியில் குவாலிஃபயர் 1ல் தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணியும், எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் திட்டமிட்டபடி தொடங்க முடியவில்லை. 

என்ன நடக்கும்?

மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் ஆட்டம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மழை பெரியளவு தொடர்ந்து ஆட்டம் நடக்காமல் போனால் என்ன நடக்கும்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி நடந்தால் ரிசர்வ் டே இருக்குமா? என்றால் நிச்சயமாக கிடையாது என்பதே பதில். 

Continues below advertisement

அப்படி மழை தொடர்ந்து பெய்து ஆட்டம் நடைபெறாமல் போனால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு பஞ்சாப் அணி தகுதி பெறும். ஏனென்றால், பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் டே உள்ளது. 

இதனால், இன்றைய போட்டி மழையின் குறுக்கீடு இல்லாமல் நடக்க வேண்டியது மும்பைக்கு மிக மிக அவசியம் ஆகும். அவ்வாறு மழையின் குறுக்கீடு இருந்தால் இரவு 11.56 மணி வரை ஆட்டம் தொடங்குவதற்காக காத்திருப்பார்கள். அவ்வாறு இரவு 11.56 மணிக்கு ஆட்டம் தொடங்கினால் 5 ஓவர்கள் ஆட்டமாக நடக்கும். 

ஆனாலும், மழை நின்று ஆட்டம் தொடங்க மைதானம் தயாராகி வருவதால் போட்டி எந்த இடையூறும் இல்லாமல் நடக்கும் என்றே கருதப்படுகிறது. மேலும். போட்டி 8.25 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளேயிங் லெவன்:

ப்ரியன்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஷ், ஸ்ரேயாஸ் ஐயர், ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், ஓமர்சாய், ஜேமிசன், விஜயகுமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் பஞ்சாப் அணியில் களமிறங்கியுள்ளனர். ரோகித் சர்மா, பார்ஸ்டோ, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன்தீர், சான்ட்னர், ராஜ்பவா, ட்ரென்ட் போல்ட், பும்ரா, டோப்ளோ மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்குகின்றனர்.