IPL 2025 Retained List: ஐபிஎல் 2025ம் ஆண்டு தொடரை வீரர்களுக்கான மெகா ஏலம், நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ளது.


வீரர்களை விடுவிக்கும் அணிகள்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. அபாரமான பேட்டிங், அட்டகாசமான பவுலிங், கடைசி பந்தில் த்ரில் வெற்றி, எதிர்பாராத தோல்விகள் என விறுவிறுப்பாக நடந்தது. அதோடு,  கண்ணீர், மகிழ்ச்சி, சோகம் என கிரிக்கெட் ரசிகர்கள் உடனும் உணர்வுப்பூர்வமாக கலந்தது. அதன் முடிவில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்று, மூன்றாவது முறையாக கோப்பை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனிடையே, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர முன்னிட்டு, வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு அணி நிர்வாகும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 வீரர்களையும் விடுவித்து, ஏலம் மூலம் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அதோடு ரைட் டு மேட்ச் என்ற கார்ட்  ஆப்ஷனும் அணிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கவிருக்கும் உத்தேச வீரர்களின் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது.


அணிகள் தக்கவைக்க உள்ள உத்தேச வீரர்கள் விவரம்:


சென்னை சூப்பர் கிங்ஸ்:



  • ருதுராஜ் கெய்க்வாட் 

  • ரவீந்திர ஜடேஜா

  • ஷிவம் துபே

  • மதீஷ பத்திரனா 

  • டெவோன் கான்வே - ஆர்டிஎம்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்



  • விராட் கோலி

  • வில் ஜாக்ஸ்

  • யாஷ் தயாள்

  • முகமது சிராஜ்

  • மேக்ஸ்வெல் - ஆர்டிஎம்


சன்ரைசர்ஸ் ஐதராபாத்:



  • டிராவிஸ் ஹெட்

  • அபிஷேக் சர்மா

  • பேட் கம்மின்ஸ்

  • நடராஜன்

  • சபாஷ் அஹமது - ஆர்டிஎம்


மும்பை இந்தியன்ஸ்:



  • ஹர்திக் பாண்ட்யா

  • சூர்யகுமார் யாதவ்

  • ஜஸ்பிரித் பும்ரா

  • நமன் தீர்

  • திலக் வர்மா - ஆர்டிஎம்


ராஜஸ்தான் ராயல்ஸ்:



  • சஞ்சு சாம்சன்

  • யஷஷ்வி ஜெய்ஷால்

  • ரியான் பராக்

  • ஜாஸ் பட்லர்

  • அவேஷ் கான் - ஆர்டிஎம்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:



  • ஸ்ரேயாஸ் அய்யர்

  • பில் சால்ட்

  • ரிங்கு சிங்

  • சுனில் நரைன்

  • ஹர்ஷித் ராணா - ஆர்டிஎம்


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:



  • நிகோலஸ் பூரான்

  • மார்கஸ் ஸ்டோய்னிஸ்

  • மயங்க் யாதவ்

  • ரவி பிஷ்னோய்

  • ஆயுஷ் பதோனி - ஆர்டிஎம்


டெல்லி கேபிடல்ஸ்:




  • ரிஷப் பண்ட்




  • குல்தீப் யாதவ்




  • அக்சர் படேல்




  • டிரிஸ்டன் ஸ்டப்ஸ்




  • ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் - ஆர்டிஎம்




குஜராத் டைட்டன்ஸ்:



  • சுப்மன் கில்

  • சாய் சுதர்ஷன்

  • ரஷித் கான்

  • டேவிட் மில்லர்

  • முகமது ஷமி - ஆர்டிஎம்


பஞ்சாப் கிங்ஸ்:



  • சாம் கரன்

  • அர்ஷ்தீப் சிங்

  • ஜிதேஷ் சர்மா

  • சஷாங்க் சிங்

  • பிரப்சிம்ரன் சிங் - ஆர்டிஎம்


நாட்சத்திர வீரர்கள் தொடர்ந்து ஒரு அணிக்காக விளையாடுவது, போட்டிகளின் மீது சலிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அத்தகைய சூழலை தடுக்கவே, இந்த மெகா ஏலம் நடத்த பிசிசிஅ திட்டமிட்டுள்ளது.