CSK Vs LSG: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2019ம் ஆண்டிற்குப் பிறகு..
பெரும் எதிர்பார்ப்பு மற்றும் நெருக்கடிக்கு மத்தியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி நேற்று களமிறங்கியது. கடந்த சில போட்டிகளில் இல்லாத அளவில் ஒழுக்கத்துடன் பந்துவீசியது மற்றும் அனுபவம் வாய்ந்த கேப்டன்சியால், 166 ரன்களுக்குள் எதிரணியை முடக்கியது. இலக்கை நோக்கி களமிறங்கிய போது கடந்த சில போட்டிகளில் கிடைக்காத, வலுவான தொடக்கம் அமைந்தது. இளம் வீரர் ஷேக் ரஷீத் 19 பந்துகளில் 27 ரன்களை குவித்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய தோனி 11 பந்துகளில் 26 ரன்களை குவித்தார். ஃபீல்டிங்கின் போதும் 3 விக்கெட்டுக்ளை வீழ்த்த உதவி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்ததால் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ம் ஆண்டிற்கு பிறகு, தோனி ஆட்டநாயகன் விருது பெறுவது இதுவே முதல் முறையாகும்.
மூச்சு விடும் சென்னை:
முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியுற்று சென்னை அணி தடுமாறியது. அதில் 3 போட்டிகள் உள்ளூர் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றவை. கடைசியாக தோனி தலைமையில் இறங்கியபோதும் மோசமான தோல்வியை சந்தித்ததால் ரசிகர்கள் கடும் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில் தான், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. நடப்பு தொடரில் அந்த அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். இது அந்த அணிக்கு பெரும் உத்வேகம் அளித்துள்ளது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. சென்னை தொடர்ந்து 10வது இடத்திலேயே நீடிக்கிறது. இதையடுத்து சென்னை அணி வரும் 20ம் தேதி மும்பை அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது.
ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:
| அணிகள் | போட்டி | வெற்றி | தோல்வி | ரன்ரேட் | புள்ளிகள் |
| குஜராத் டைட்டன்ஸ் | 6 | 4 | 2 | ||
| டெல்லி கேபிடல்ஸ் | 5 | 4 | 1 | 1.006 | 8 |
| ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 6 | 4 | 2 | 0.672 | 8 |
| லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 7 | 4 | 3 | 0.086 | 8 |
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 6 | 3 | 3 | 0.803 | 6 |
| பஞ்சாப் கிங்ஸ் | 5 | 3 | 2 | 0.065 | 6 |
| மும்பை இந்தியன்ஸ் | 6 | 2 | 4 | 0.027 | 4 |
| ராஜஸ்தான் ராயல்ஸ் | 6 | 2 | 4 | -0.838 | 4 |
| சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 6 | 2 | 4 | -1.245 | 4 |
| சென்னை சூப்பர் கிங்ஸ் | 7 | 2 | 5 | -1.276 - | 4 |
இன்றைய போட்டி:
இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை, பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் முறையே புள்ளிப்பட்டியலில் 5 மற்றும் 6வது இடங்கலில் உள்ளன. நியூ சண்டிகரில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் அதிகபட்சம் இரண்டாவது இடம் வரை புள்ளிப்பட்டியலில் முன்னேறக்கூடும். ஒருவேளை பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் அதிகபட்சம் 4வது இடம் வரை முன்னேறக்கூடும்.