IPL 2025 CSK Vs KKR: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

நடப்பு சாம்பியனை வீழ்த்திய சிஎஸ்கே:

நடப்பு தொடரில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை அணி நேற்று கொல்கத்தாவை எதிர்கொண்டது. 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை, 60 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், இந்த போட்டியிலும் தோல்வி தான் என கருதிய நிலையில், பிராவிஸ் மற்றும் துபே நிலைத்து நின்று ஆடி அணியை கரை சேர்த்தனர். இறுதியில் தோனி ஒரு சிகர் விளாசி, நடப்பு தொடரில் சிஎஸ்கேவின் மூன்றாவது வெற்றியை உறுதி செய்தார். அதன்மூலம், 4 தொடர் தோல்விகளுக்கு பிறகு சென்னை அணி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

கொல்கத்தா நாக்-அவுட்?

ஏற்கனவே 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளை பெற்று இருந்த, நடப்பு சாம்பியனான கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமிருந்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டி இருந்தது. ஆனால், சென்னை அணிக்கு எதிராக நேற்று தோற்றதன் மூலம் கொல்கத்தாவின் பிளே-ஆஃப் கனவு தகர்ந்துள்ளது. ஏற்கனவே இரண்டு அணிகள் 16 புள்ளிகளும், ஒரு அணி 15 புள்ளிகளும், ஒரு அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கொல்கத்தா கிட்டத்தட்ட நடப்புத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. எற்கனவே சென்னை, ராஜஸ்தான் மற்றும் ஐதராத் அணிகள்,பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2025 - புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட்
குஜராத் டைட்டன்ஸ் 11 8 3 16 0.793
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 8 3 16 0.482
பஞ்சாப் கிங்ஸ் 11 7 3 115 0.376
மும்பை இந்தியன்ஸ் 12 7 5 14 1.156
டெல்லி கேபிடல்ஸ் 11 6 4 13 0.362 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 5 8 11 0.193
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 11 5 6 10 -0.469
சன்ரைசர்ஸ் ஐதராபாத்  11 3 7 7 -1.192
ராஜஸ்தான் ராயல்ஸ் 12 3 9 6 -0.718 
சென்னை சூப்பர் கிங்ஸ் 12 3 9 6 -0.992

டெல்லி - பஞ்சாப் இன்று பலப்பரீட்சை:

பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்கப்போவது யார் என்ற பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் தலா 11 போட்டிகளில் விளையாடி,  பஞ்சாப் 15 புள்ளிகளுடன் மூன்றாவத் இடத்திலும், டெல்லி 13 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் அணி இன்றைய போடிட்யில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறக்கூடும். அதேநேரம், டெல்லி அணி வெற்றி பெற்றால், 15 புள்ளிகளுடன் மூன்றவாது இடம் வரை முன்னேறகூடும். கடைசியாக விளையாடி 5 லீக் போட்டிகளில் டெல்லி ஒரே ஒரு வெற்றியையும், பஞ்சாப் மூன்று வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.