IPL 2025 Auction: ஐபிஎல் 2025 சீசன் புதிய விதிகளின்படி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஐபிஎல் 2025:


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிபோட்டியில், ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நடப்பாண்டு சீசன் முடிந்த உடனே, அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, துவரை நாம் அறிந்த முக்க்ய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ஐபிஎல் 2025 ஏலம்:


ஐபிஎல் 2024 மினி ஏலத்தைப் போலல்லாமல், ஐபிஎல் 2025 மெகா ஏலமாக இருக்கும். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அதோடு, ஒரு ரைட் டு மேட்ச் கார்ட் வாய்ப்பும் வழங்கப்படும். மற்றபடி அணிக்கு தேவையான அனைத்து வீரர்களையும் ஏலம் மூலம் மட்டுமே பெற முடியும். கடந்த ஆண்டு ஏலம் வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில், நடப்பாண்டின் இறுதியில் நடைபெற உள்ள மெகா ஏலம் எங்கு நடைபெறும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 


ஐபிஎல் 2025 சீசனில் 84 போட்டிகள்?


ஐபிஎல் 2025 சீசனானது ஐபிஎல் 2024 போன்றே,  ஒரு அணிக்கான பாதி போட்டிகள் உள்ளூர் மைதானத்திலும், மீதமுள்ள போட்டிகள் வெளியூர் மைதானங்களிலும் நடைபெறலாம். அதேநேரம், நடப்பு தொடரில் சில அணிகள் ஒவ்வொருமுறை மட்டுமே மோதும்படி அட்டவணை தயார் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா 2 முறை மோதும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தற்போதுவர அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்றாலும்,  இந்த ஆண்டின் 74 போட்டிகளுடன் ஒப்பிடும்போது, ​​அடுத்த சீசனில் ஒளிபரப்பாளர்களின் (டிஸ்னி ஸ்டார் மற்றும் ஜியோ) கோரிக்கையின்படி 84 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. . 2027ல் இந்த எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.


தொடரில் புதிய அணிகளா?


முன்மொழியப்பட்ட 84 போட்டிகள் அதோடு உள்ளூர் மற்றும் வெளியூர் போட்டி வடிவத்தின் அடிப்படையில், புதிய அணிகளை அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை. அதாவது ஐபிஎல் 2025-ல் இதே பத்து அணிகள் இடம்பெறவே அதிக வாய்ப்புள்ளத. அதன்படி,  சென்னை சூப்பர் கிங்ஸ் , டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்க உள்ளன.


ஐபிஎல் 2025 தேதி அட்டவணை:


ஐபிஎல் 2024 சீசனைப் போலவே, ஐபிஎல் 2025 மார்ச்-மே காலத்தில் நடைபெறும். அந்த காலகட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் பட்டியலிடப்படவில்லை. பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 ஐபிஎல் சீசன், நடைபெறும் அதேகாலகட்டத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.