ஐ.பி.எல் சீசன் 17ல் வொய்ட் யார்க்கர் பந்து வீச்சு முறையை பெளலர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.


 


சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் விளையாடப்பட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு போட்டிகளிலும் வெவ்வேறு விதமான யுக்திகளை வீரர்கள் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் சில நேரங்களில் பேட்டர்கள் தங்கள் அணிக்கு அதிக ரன்களை சேர்த்துக் கொடுப்பார்கள், சில சமயங்களில் பந்து வீச்சாளர்கள் கை ஓங்கும். அப்போது விக்கெட்டுகள் மளமளவென விழும் இரண்டு மூன்று நாட்கள் நடக்க வேண்டிய டெஸ்ட் போட்டிகளில் சில நேரங்களில் ஒரு நாளில் முடிந்த சம்பவங்களும் சில நேரங்களில் நடக்கும்.


இதில் முக்கியமாக சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்கம் அதிகம் இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்கள் மாஸ் காட்டுவார்கள்.  அதேபோல், ஒரு நாள் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சளர்களின் தாக்கம் அதிகம் இருக்கும். தங்களது வேகப்பந்து வீச்சின் மூலம் பேட்டிங் செய்பவர்களை அவர்கள் மிரட்டுவார்கள். இப்படி டெஸ்ட் கிரிக்கெட் என்றால் சுழற்பந்து, ஒருநாள் கிரிக்கெட் என்றால் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகள் எடுபடும்.


 ஒயிட் யார்க்கர்:


இந்நிலையில் தான் டி20 போட்டிகளில் ஒயிட் யார்க்கர் என்ற முறையை பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால்  நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் 200 ரன்களை கடப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றாக இருக்கிறது. பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாக பல்வேறு விதிகள் இருக்கிறது. அதிக ரன்களை குவிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது. இச்சூழலில் பேட்டர்களின் இந்த அதிரடி ஆட்டத்தை தடுப்பதற்கு ஒயிட் யார்க்கர் முறையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.


ஒரு காலத்தில் பேட்ஸ்மேன்களை ஆட்டிப்படைக்க யார்க்கர் மட்டும் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் போட்டிகளின் தொடர் பயிற்சிகளின் மூலம் பேட்ஸ்மேன்கள் யார்க்கர்களை எதிர்கொள்வதில் சிறந்து விளங்கினர். இச்சூழலில் தான் ஒயிட் யார்க்கரை ஐ.பி.எல் போட்டியில் பந்து வீச்சாளர்கள் அதிக வீசி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 1  ஆம் தேதி நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியின் போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்  கலீல் அகமது  ஒயிட் யார்க்கர் பந்துகளை அதிகம் வீசி பேட்டர்களை மிரட்டினார்.


ஸ்லோ பவுன்சர்


2021 டி20 உலகக் கோப்பையில் வீசப்பட்ட மொத்த பந்துகளில் 23.2 சதவீதம் மெதுவான பந்துகள் வீசப்பட்டதாக தகவல்கள் உள்ளன.  ஆஃப்-பேஸ் பந்துகள் T20 கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானவை , அவற்றில் பல வேறுபாடுகள் உள்ளன. சில நேரங்களில் இந்த யுக்தியை பயன்படுத்து பந்துவீச்சாளர்கள் ஸ்லோ பவுன்சர் பந்துகளை வீசுவார்கள். இது பெரும்பாலும் பேட்ஸ்மேனிடமிருந்து தவறான ஸ்ட்ரோக்கை உருவாக்கும்,  இதன் விளைவாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஒயிட் யார்க்கரைப் போலவே, ஸ்லோ பவுன்சரும் சரியாக வீசினால் அது பந்துவீச்ச்சாளர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக அமையும்.