இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ன் 23வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணியால் 26 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் இந்த தோல்வி மற்றும் ஹைதராபாத் அணியின் வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி 6 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.344 உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.196 என ஆறாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை தலா 5 போட்டிகளில் விளையாடி இதில் ஹைதராபாத் 3 வெற்றிகளையும், பஞ்சாப் 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
இந்தநிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு பிறகு எந்தெந்த அணிகள் புள்ளிப்பட்டியலில் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்று இங்கே பார்க்கலாம்.
தரவரிசை |
அணிகள் |
போட்டிகள் |
வெற்றி |
தோல்வி |
டை |
முடிவு இல்லை |
புள்ளிகள் |
ரன் ரேட் |
1 |
ராஜஸ்தான் ராயல்ஸ்(RR) |
4 |
4 |
0 |
0 |
0 |
8 |
1.12 |
2 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) |
4 |
3 |
1 |
0 |
0 |
6 |
1.528 |
3 |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) |
4 |
3 |
1 |
0 |
0 |
6 |
0.775 |
4 |
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) |
5 |
3 |
2 |
0 |
0 |
6 |
0.666 |
5 |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) |
5 |
3 |
2 |
0 |
0 |
6 |
0.344 |
6 |
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) |
5 |
2 |
3 |
0 |
0 |
4 |
-0.196 |
7 |
குஜராத் டைட்டன்ஸ் (GT) |
5 |
2 |
3 |
0 |
0 |
4 |
-0.797 |
8 |
மும்பை இந்தியன்ஸ் (MI) |
4 |
1 |
3 |
0 |
0 |
2 |
-0.704 |
9 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) |
5 |
1 |
4 |
0 |
0 |
2 |
-0.843 |
10 |
டெல்லி கேப்பிடல்ஸ் (DC) |
5 |
1 |
4 |
0 |
0 |
2 |
-1.37 |
ஆரஞ்சு கேப்:
1. விராட் கோலி (RCB): 5 போட்டிகளில் 316 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 113*, சராசரி: 105.33, ஸ்டிரைக் ரேட்: 146.29, 1 சதம், 2 அரைசதம், 29 பவுண்டரிகள், 12 சிக்சர்கள்.
2. சாய் சுதர்சன் (GT): 5 போட்டிகளில் 191 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 45, சராசரி: 38.2, எஸ்ஆர்: 129.05, 20 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்.
3. ஹென்ரிச் கிளாசென் (SRH): 5 போட்டிகளில் 186 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 80*, சராசரி: 62, SR: 193.75, 2 அரைசதம், 7 பவுண்டரிகள், 17 சிக்சர்கள்.
4. ரியான் பராக் (RR): 4 போட்டிகளில் 185 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 84*, சராசரி: 92.5, SR: 158.11, 2 அரைசதம், 14 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள்.
5. சுப்மன் கில் (GT): 5 போட்டிகளில் 183 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 89*, சராசரி: 45.75, எஸ்ஆர்: 147.58, 1 அரைசதம், 13 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்.
ஐபிஎல் 2024ல் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 316 ரன்கள் எடுத்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார், எனவே, இவரிடம்தான் ஆரஞ்சு கேப் தற்போது உள்ளது.
பர்பிள் கேப்:
1. முஸ்தாபிசுர் ரஹ்மான் (CSK): 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள். இதுவரை 16 ஓவர்கள் மட்டுமே வீசி 128 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு: 4/29, சராசரி: 14.22, எகானமி: 8, 1 நான்கு விக்கெட்டுகள்.
2. யுஸ்வேந்திர சாஹல் (RR): 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகள். இதுவரை 14 ஓவர்கள் மட்டுமே வீசி 89 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு: 3/11, சராசரி: 11.12, எகானமி: 6.35.
3. அர்ஷ்தீப் சிங் (PBKS): 5 போட்டிகளில் 8 விக்கெட்டுகள். இதுவரை 18.2 ஓவர்கள் மட்டுமே வீசி 160 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இவரது சிறந்த பந்துவீச்சு: 4/29, சராசரி: 20, எகானமி: 8.72, 1 நான்கு விக்கெட்டுக்கள்.
4. ஜெரால்ட் கோட்ஸி (MI): 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகள். இதுவரை 14.3 ஓவர்கள் மட்டுமே வீசி 154 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு: 4/34, சராசரி: 22, எகானமி: 10.62, 1 நான்கு விக்கெட்டுக்கள்.
5. மோஹித் ஷர்மா (GT): 5 போட்டிகளில் 7 விக்கெட்டுகள். இதுவரை 19 ஓவர்கள் மட்டுமே வீசி 165 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு: 3/25, சராசரி: 23.57, எகானமி: 8.68.
சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் 2024 இன் விக்கெட்டுகளை வீழ்த்தி தரவரிசையில் தொடர்ந்து முன்னிலை வகித்து, பர்பிள் கேப்பை தன்வசம் வைத்துள்ளார்.