IPL 2024 Points Table: ராஜஸ்தானை இறக்கி முதலிடத்திற்கு ஏற்றம்.. புள்ளிப்பட்டியலில் கெத்துக்காட்டும் கொல்கத்தா..!

IPL 2024 Points Table: ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 

Continues below advertisement

விசாகப்பட்டினத்தில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்குநேர் மோதியது. இந்த போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த மிகப்பெரிய ரன்கள் வித்தியாச வெற்றியால் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 புள்ளிகள் அட்டவணையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 

Continues below advertisement

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் மற்றும் இளம் வீரர் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோரின் அதிரடி அரைசதங்களால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 

யார் யார் எந்த இடம்..?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 புள்ளிகள் அட்டவணையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸை தரவரிசையில் இரண்டாவது சரிந்தது. இதற்கிடையில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் இரண்டு இடங்களை இழந்து 9வது இடத்திற்கு வந்தது. டெல்லி கேபிடல்ஸ் தோல்வியால் பஞ்சாப் கிங்ஸ் 7வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8வது இடத்திற்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ் , ஐபிஎல் 2024 போட்டியில் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், முதல் வெற்றியைப் பதிவு செய்யாமல், 10வது இடத்தில் உள்ளது.

 டெல்லி கேப்பிடல்ஸ் (DC) vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ஐபிஎல் போட்டிக்குப் பிறகு IPL 2024 அப்டேட் செய்யப்பட்ட புள்ளிகள் அட்டவணையை கீழே பார்க்கவும்

தரவரிசை அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி என்.ஆர்.ஆர் புள்ளிகள்
1 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 3 0 +2.518 6
2 ராஜஸ்தான் ராயல்ஸ் 3 3 0 +1.249 6
3 சென்னை சூப்பர் கிங்ஸ் 3 2 1 +0.976 4
4 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 2 1 +0.483 4
5 குஜராத் டைட்டன்ஸ் 3 2 1 -0.738 4
6 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 1 2 +0.204 2
7 பஞ்சாப் கிங்ஸ் 3 1 2 -0.337 2
8 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 1 2 -0.876 2
9 டெல்லி கேப்பிடல்ஸ் 4 1 3 -1.347 2
10 மும்பை இந்தியன்ஸ் 3 0 3 -1.423 0

டெல்லி கேப்பிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான போட்டிக்குபிறகு யாரிடம் பர்பிள் மற்றும் ஆரஞ்சு கேப் உள்ளது என்று இங்கே பார்ப்போம். 

ஆரஞ்சு கேப்: 

ஐபிஎல் 2024லில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு கேப் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 203 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

1. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) - 4 போட்டிகள் (203 ரன்கள்)

2. ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 3 போட்டிகள் (181 ரன்கள்)

3. ஹென்ரிச் கிளாசென் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 3 போட்டிகள் (167 ரன்கள்)

4. ரிஷப் பந்த் (டெல்லி கேபிடல்ஸ்) - 4 போட்டிகள் (152 ரன்கள்)

5. டேவிட் வார்னர் (டெல்லி கேபிடல்ஸ்) - 4 போட்டிகள் (148 ரன்கள்)

பர்பிள் கேப்: 

ஐபிஎல் 2024லில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்களுக்கான பர்பிள் கேப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

1. முஸ்தாபிசுர் ரஹ்மான் (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 3 போட்டிகள் (7 விக்கெட்டுகள்)

2. கலீல் அகமது (டெல்லி கேபிடல்ஸ்) - 4 போட்டிகள் (6 விக்கெட்டுகள்)

3. மயங்க் யாதவ் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - 2 போட்டிகள் (6 விக்கெட்டுகள்)

4. மோஹித் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்) - 3 போட்டிகள் (6 விக்கெட்டுகள்)

5. யுஸ்வேந்திர சாஹல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 3 போட்டிகள் (6 விக்கெட்டுகள்)

Continues below advertisement