ஐபிஎல் 2024ன் 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் லக்னோயின் வெற்றி மற்றும் சென்னையின் தோல்விக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம்..
ஐபிஎல் 2024ல் லக்னோவின் நான்காவது வெற்றி இதுவாகும். இதன்மூலம், 8 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.123. லக்னோ இதுவரை 7 போட்டிகளில் விளையாடி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. சென்னையும் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, லக்னோவுக்கு எதிராக இந்த சீசனின் மூன்றாவது ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. தோல்விக்குப் பிறகு, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 8 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.529 உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
முதல் 4 இடங்களில் எந்தெந்த அணிகள் உள்ளன..?
ராஜஸ்தான் பல நாட்களாகவே தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 7 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முறையே தலா 8 புள்ளிகளுடன் இரண்டு, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. கொல்கத்தாவின் நிகர ரன் விகிதம் +1.399 மற்றும் ஹைதராபாத் நிகர ரன் விகிதம் +0.502.
மற்ற அணிகளின் நிலைமை என்ன..?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே 6, 7 மற்றும் எட்டாவது இடங்களில் உள்ளன. டெல்லி நிகர ரன் ரேட் -0.074, மும்பை நிகர ரன் ரேட் -0.133 மற்றும் குஜராத் நிகர ரன் ரேட் -1.303 ஆகும். மூன்று அணிகளும் (டெல்லி, மும்பை மற்றும் குஜராத்) இதுவரை தலா 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை தலா போட்டிகளில் விளையாடியுள்ளன. பஞ்சாப் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பெங்களூரு அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அட்டவணை:
தரவரிசை |
அணிகள் |
போட்டிகள் |
வெற்றி |
தோல்வி |
டை |
பாயிண்ட்ஸ் |
ரன் ரேட் |
1 |
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) |
7 |
6 |
1 |
0 |
12 |
+0.677 |
2 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) |
6 |
4 |
2 |
0 |
8 |
+1.399 |
3 |
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) |
7 |
4 |
3 |
0 |
8 |
+0.502 |
4 |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) |
6 |
4 |
2 |
0 |
8 |
+0.502 |
5 |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) |
7 |
4 |
3 |
0 |
8 |
+0.123 |
6 |
டெல்லி கேப்பிடல்ஸ் (DC) |
7 |
3 |
4 |
0 |
6 |
-0.074 |
7 |
மும்பை இந்தியன்ஸ் (MI) |
7 |
3 |
4 |
0 |
6 |
-0.133 |
8 |
குஜராத் டைட்டன்ஸ் (GT) |
7 |
3 |
4 |
0 |
6 |
-1.303 |
9 |
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) |
7 |
2 |
5 |
0 |
4 |
-0.251 |
10 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) |
7 |
1 |
6 |
0 |
2 |
-1.185 |
ஆரஞ்சு கேப்:
1. விராட் கோலி (RCB) - 7 போட்டிகள், 361 ரன்கள், சராசரி: 72.2
2. ரியான் பராக் (RR) - 7 போட்டிகள், 318 ரன்கள், சராசரி: 63.6
3. ரோஹித் சர்மா (MI) - 7 போட்டிகள், 297 ரன்கள், சராசரி: 49.5
4. KL ராகுல் (KKR) - 7 போட்டிகள், 286 ரன்கள், சராசரி: 40.85
5. சஞ்சு சாம்சன் (RR) - 7 போட்டிகள், 276 ரன்கள், சராசரி: 55.20
ஐபிஎல் 2024 ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ஆர்சிபி ஜாம்பவான் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
பர்பிள் கேப்:
1. ஜஸ்பிரித் பும்ரா (MI) - 7 போட்டிகள், 13 விக்கெட்டுகள், எகானமி: 5.96
2. ஜெரால்ட் கோட்ஸி (MI) - 7 போட்டிகள், 12 விக்கெட்கள், எகானமி: 9.92
3. யுஸ்வேந்திர சாஹல் (RR) - 7 போட்டிகள், 12 விக்கெட்டுகள், எகானமி 8.34
4. முஸ்தாபிசுர் ரஹ்மான் (CSK) - 6 போட்டிகள், 11 விக்கெட்டுகள், எகானமி: 9.41
5. ஹர்ஷல் படேல் (PBKS) - 7 போட்டிகள், 10 விக்கெட்டுகள், எகானமி: 10.11