IPL 2024 Points Table: மற்றொரு வெற்றியுடன் முதலிடத்தில் ராஜஸ்தான்.. டாப் 4ல் சென்னை அணி.. முழு புள்ளிப்பட்டியல் விவரம்!

IPL 2024 Points Table: நேற்றைய போட்டியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் +0.677 என்ற ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Continues below advertisement

ஐபிஎல் 2024ன் 31வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே ஈடன் கார்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 224 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி துரத்தும்போது 60 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பினார் பட்லர். 

Continues below advertisement

நேற்றைய போட்டியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் +0.677 என்ற ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தோல்வியடைந்த கொல்கத்தா அணி 8 புள்ளிகள் மற்றும் +1.399 என்ற ரன் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாகவே இரு அணிகளும் முறையே முதல் மற்றும் இரண்டு இடங்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், கொல்கத்தா இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி பெற்றுள்ளது. 

மற்ற அணிகளின் நிலைமை என்ன..? 

சென்னை சூப்பர் கிங்ஸ் 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. சென்னையின் நிகர ரன் ரேட் +0.726 ஆகவும், ஹைதராபாத் நிகர ரன் ரேட் +0.502 ஆகவும் உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் 6 போட்டிகளில் விளையாடி தலா 4 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளன. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் 6-6 புள்ளிகளுடன் முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. லக்னோவின் நிகர ஓட்ட விகிதம் +0.038 ஆகவும், குஜராத்தின் நிகர ரன் ரேட் -0.637 ஆகவும் உள்ளது. இரு அணிகளும் தலா 6 என்ற கணக்கில் விளையாடி தலா 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றன. இதற்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகியவை முறையே தலா 4 புள்ளிகளுடன் ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன. மூன்று அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி தலா 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளன. இறுதியாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் அதாவது 10வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

ஐபிஎல் 2024 புள்ளிகள் அட்டவணை: 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

புள்ளிகள்

ரன் ரேட்

1

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

7

6

1

0

12

0.677

2

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

6

4

2

0

8

1.399

3

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

6

4

2

0

8

0.726

4

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

6

4

2

0

8

0.502

5

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

6

3

3

0

6

0.038

6

குஜராத் டைட்டன்ஸ் (GT)

6

3

3

0

6

-0.637

7

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

6

2

4

0

4

-0.218

8

மும்பை இந்தியன்ஸ் (MI)

6

2

4

0

4

-0.234

9

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

6

2

4

0

4

-0.975

10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

7

1

6

0

2

-1.185

ஐபிஎல் 2024 அதிக ரன்கள் - ஆரஞ்சு கேப்: 

1. விராட் கோலி (ஆர்சிபி): 361 ரன்கள், அதிகபட்ச ரன்கள் 113*, சராசரி 72.2, எஸ்ஆர் 147.34, 1 சதம், 2 அரைசதம், 35 பவுண்டரிகள், 14 சிக்சர்கள்.
2. ரியான் பராக் (ஆர்ஆர்): 318 ரன்கள், அதிகபட்ச ரன்கள் 84*, சராசரி 63.6, எஸ்ஆர் 161.42, 3 அரைசதம், 22 பவுண்டரிகள், 20 சிக்சர்கள்.
3. சுனில் நரைன் (கேகேஆர்): 276 ரன்கள், அதிகபட்ச ரன்கள் 109, சராசரி 46, எஸ்ஆர் 187.75, 1 சதம், 1 அரைசதம், 26 பவுண்டரிகள், 20 சிக்சர்கள்.
4. சஞ்சு சாம்சன் (ஆர்ஆர்): 276 ரன்கள், அதிகபட்ச ரன்கள் 82*, சராசரி 55.2, எஸ்ஆர் 155.05, 3 அரைசதம், 27 பவுண்டரிகள், 11 சிக்சர்கள்.
5. ரோஹித் சர்மா (எம்ஐ): 261 ரன்கள், அதிகபட்ச ரன்கள் 105*, சராசரி 52.2, எஸ்ஆர் 167.3, 1 சதம், 28 பவுண்டரிகள், 15 சிக்சர்கள்.

ஐபிஎல் 2024 அதிக விக்கெட்கள் - பர்பிள் கேப்:

1. யுஸ்வேந்திர சாஹல் (ஆர்ஆர்): 7 இன்னிங்ஸ், 26 ஓவர்கள், 217 ரன்கள், 12 விக்கெட்டுகள், சராசரி 18.08, எகானமி ரேட் 8.34.
2. ஜஸ்பிரித் பும்ரா (எம்ஐ): 6 இன்னிங்ஸ், 24 ஓவர்கள், 146 ரன்கள், 10 விக்கெட்டுகள், சராசரி 14.6, எகானமி ரேட் 6.08, 1 ஐந்து விக்கெட்டுகள்.
3. முஸ்தாபிசுர் ரஹ்மான் (சிஎஸ்கே): 5 இன்னிங்ஸ், 20 ஓவர்கள், 183 ரன்கள், 10 விக்கெட்டுகள், சராசரி 18.3, எகானமி ரேட் 9.15, 1 நான்கு விக்கெட்டுகள்.
4. பாட் கம்மின்ஸ் (எஸ்ஆர்ஹெச்): 6 இன்னிங்ஸ், 24 ஓவர்கள், 189 ரன்கள், 9 விக்கெட்டுகள், சராசரி 21, எகானமி ரேட் 7.87.
5. ககிசோ ரபாடா (பிபிகேஎஸ்): 6 இன்னிங்ஸ், 24 ஓவர்கள், 191 ரன்கள், 9 விக்கெட்டுகள், சராசரி 21.22, எகானமி ரேட் 7.95.

Continues below advertisement