IPL 2024: ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “ஐபிஎல்(IPL)-2024 கிரிக்கெட் போட்டிகள் வரும் 22.03.2024 முதல் சென்னை, MA சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த IPL போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Chennai Super Kings Cricket Limited நமது MTC-யில் முன்னதாக பணம் செலுத்தி, போட்டியை காணவருபவர்களின் வசதிக்காக, IPL போட்டிக்கான Online/pre-printed டிக்கெட் வைத்திருந்தால் மா.போ.கழக அனைத்து பேருந்துகளிலும் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு பிற இடங்களிலிருந்து MA சிதம்பரம் விளையாட்டு மைதானத்திற்கும் அதேபோல், போட்டி முடிந்த பின்பு மூன்று மணி நேரத்திற்குள் MA சிதம்பரம் விளையாட்டு மைதானத்திலிருந்து பிற இடங்களுக்கும் மா.போ.க பேருந்து நடத்துநரிடம் IPL போட்டிக்கான Online/pre-printed டிக்கெட் காண்பித்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


எனவே, இது தொடர்பாக, நடத்துநர்கள் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர்கள்பின்வரும் வழிமுறைகளை முறையாக பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



  1. பயணிகளிடம் ஐபிஎல்(IPL) கிரிக்கெட் போட்டிக்கான Online/pre-printed டிக்கெட் வைத்துள்ளாரா என உறுதி செய்த பின்னர் நடத்துநர் அவர்களை பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

  2. கிரிக்கெட் Online/pre-printed டிக்கெட்டில் போட்டி நடைபெறும் தேதி. மற்றும் நேரம் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்

  3. பயணிகள் கைபேசியில் அல்லது பிரதி எடுக்கப்பட்ட Online/pre-printed Ticket வைத்திருக்க வேண்டும்.

  4. கிரிக்கெட் போட்டிக்கான Online/pre-printed போட்டி நடைபெறும் நாளில் மட்டுமே பயணம் செய்ய செல்லுபடியாகும்.


மேலும், கிளை மேலாளர்கள். மண்டல மேலாளர்கள் இது குறித்து ஓட்டுநர். நடத்துநர்களுக்கு விளக்கிக்கூறி IPL போட்டி நடைபெறும் நாட்களில் MA 'சிதம்பரம் விளையாட்டு மைதானம் வழியாக செல்லும் பேருந்துகளில், IPL போட்டி காண்பதற்கான online/pre-printed Ticket வைத்திருந்தால் அவர்களிடம் நடத்துநர் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை சரி பார்த்து பயணச்சீட்டு அளிக்காமல் அவர்களை மா.போ.கழக பேருந்தில்(குளிர்சாதன பேருந்து நீங்கலாக) பயணிக்க அனுமதிக்கலாம் என இச்சுற்றறிக்கை வழி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பயணச்சீட்டு பரிசோதகர்கள், பயணச்சீட்டு பரிசோதனையின்போது மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை பின்பற்றி பயணிகளிடம் IPL கிரிக்கெட் போட்டிக்கான online/pre-printed Ticket வைத்திருக்கிறாரா என பரிசோதித்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து உதவி மேலாளர்(இயக்கம்) அவர்கள் அனைத்து பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.