ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். 


ஐபிஎல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐபிஎல் சீசன் 17. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த சீசனில் இன்று (மே 24) குவாலிபியர் 2 நடைபெற உள்ளது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.


இதில் வெற்றி பெறும் அணி மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தான் நடைபெற இருக்கிறது.


முன்னதாக இந்த சீசனில் டூ பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி தாங்கள் விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்தது. பின்னர் நடைபெற்ற போட்டிகள் தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. இந்த முறை எப்படியும் கோப்பையை அந்த அணி கைப்பற்றி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ரசிகர்களுக்கு நன்றி சொன்ன கோலி:


இந்நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது. இந்த தோல்வி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களின் மனதை காயப்படுத்துவதாக அமைந்தது.


 இதனிடையே இந்த சீசனில் ஆதரவளித்த ரசிகர்களுக்கு ஆர்சிபி வீரர்கள் நன்றி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தான் இந்த சீசன் முழுவதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “எப்பொழுதும் போல் எங்களை நேசிக்கவும் பாராட்டவும் செய்ததற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அனைத்து ரசிகர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி" என்று கூறி ஹார்டின் இமோஜியை பகிர்ந்துள்ளார் விராட் கோலி. 







இதனை பார்த்த ரசிகர்கள் எப்போதும் எங்கள் ஆதரவு ஆர்.சி.பி.க்குத்தான் என்று பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் 17 வருடங்களாக நாம் கோப்பையை வெல்லாவிட்டாலும் ஒவ்வொரு முறையும் நமது அணியினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். கண்டிப்பாக நமது அணி கோப்பையை வெல்லும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க: MS Dhoni New Team : சென்னை அணிக்கு எதிராக எம்.எஸ்.தோனியா? புதிய அணியை உருவாக்கும் திட்டமா? பதிவு சொல்வது என்ன?


மேலும் படிக்க: https://tamil.abplive.com/sports/cricket/ms-dhoni-new-team-i-am-starting-my-own-team-ms-dhoni-post-after-csks-exit-from-ipl-2024-sparks-speculations-184719/amp