SRH vs RR LIVE Score: 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வி; இறுதிப் போட்டிக்கு ஹைதராபாத் தகுதி!
IPL 2024 SRH vs RR LIVE Score Updates: குவாலிஃபையர் 2-வில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் தொடர்பான லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
இறுதியில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் அப்போதே ஹைதராபாத் அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கடைசி மூன்று ஓவர்களில் ராஜஸ்தான் அணி 53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிக்கொண்டு உள்ளது. 17 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் சேர்த்துள்ளது.
16 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. வெற்றிக்கு இன்னும் 4 ஓவர்களில் 63 ரன்கள் தேவைப்படுகின்றது.
15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்து இலக்கைத் துரத்தி வருகின்றது. களத்தில் துருவ் ஜுரேல் மற்றும் ரோமன் பவல் உள்ளனர்.
14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் சேர்த்து ரன்கள் சேர்க்க திணறி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. கேப்டன் சாம்சன் 10 ரன்களுக்கு அவுட் ஆனார்.
பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 32 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
காட்மோர் தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 4வது ஓவரில் இழந்து வெளியேறினார். அணியின் ஸ்கோர் 24ஆக உள்ளது.
3 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் ராஜஸ்தான் அணி 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் 19வது ஓவரில் க்ளாசன் தனது விக்கெட்டினை க்ளீன் போல்ட் முறையில் இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை சந்தீப் சர்மா கைப்பற்றினார்.
18 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
33 பந்துகளில் க்ளாசன் அரைசதம் விளாசி சிறப்பாக விளையாடி வருகின்றார்.
17 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
12 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் 9,10 மற்றும் 11 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஒரு பவுண்டரி கூட விளாசவில்லை. 11 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 102 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணி 10.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் 10வது ஓவரின் கடைசிப் பந்தில் டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 10 ஓவர்களில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஓவரில்தான் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை.
8 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7.4 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 90 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ட்ரெண்ட் போல்ட் இதுவரை பவர்ப்ளேவின் முதல் ஓவரில் மட்டும் 29 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
7 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5வது ஓவரை வீசிய போல்ட் திருப்பாதி மற்றும் மார்க்கரம் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஹைதராபாத் அணி பெரும் சரிவில் உள்ளது. 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4.1 ஓவரில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 45 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் 4வது ஓவரினை வீசிய அஸ்வின் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு மிரட்டினார் ராகுல் திருப்பாதி.
3 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 29 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இரண்டு ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 22 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
முதல் ஓவரில் ஹைதராபாத் அணி 13 ரன்கள் குவித்திருந்தாலும், கடைசிப் பந்தில் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோலர்-காட்மோர், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்/ கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், டி நடராஜன்
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
RR Vs SRH, IPL Qualifier 2: ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் தகுதிச்சுற்று போட்டி - 2:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் 70 லீக் சுற்று போட்டிகள், ஒரு தகுதிச்சுற்று மற்றும் எலிமினேட்டர் போட்டி ஆகியவற்றின் முடிவில், 7 அணிகள் வெளியேற 3 அணிகள் மட்டுமே தற்போது மீதமுள்ளன. அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடப்போவது யார் என்பதை இறுதி செய்யும், இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.
ராஜஸ்தான் Vs ஐதராபாத் பலப்பரீட்சை:
இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றி பெறுவதோடு, இறுதிப்போட்டியிலும் வென்று, இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக இரு அணிகளும் தலா இரண்டு முறை, இறுதிப்போட்டியில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
ராஜஸ்தானின் பலம், பலவீனங்கள்:
ராஜஸ்தான் அணி நடப்பு தொடரின் முதல் பாதியில் அடுத்தடுத்து அதிரடியான வெற்றிகளை குவித்தது. ஆனால், இரண்டம் பாதியில் தொடர்ந்து தோல்விகளை தழுவியது. இருப்பினும் எலிமினேட்டர் போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மேயர் ஆகியோர் பேட்டிங்கில் அதிரடியான ஃபார்மில் உள்ளனர். ஜெய்ஷ்வால் மற்றும் ஜுரெல் ஆகியோரும் தங்களது பங்களிப்பை வழங்கினால், அணியின் பேட்டிங் மேலும் வலுவாகும். பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், அஷ்வின் மற்றும் சாஹல் ஆகியோரின் காம்போ, எதிரணிக்கு கடும் நெருக்கடியை தருகிறது. அவேஷ் கானும் நல்ல பங்களிப்பை வழங்கி வருகிறார். இதனால் ராஜஸ்தான் அணி சரியான கலவையிலான பிளேயிங் லெவனை கொண்டுள்ளது.
ஐதராபாத்தின் பலம், பலவீனங்கள்:
மறுமுனையில் ஐதாராபாத் அணி நடப்பு தொடரில் பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, திரிபாதி, கிளாசென் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் அதிரடியாக ரன்களை குவிக்கின்றனர். அதேநேரம், டார் ஆர்டட் பேட்டிங் சொதப்பினால், அணியின் மொத்த பேட்டிங் யூனிட்டும் தடுமாறுவதை பல போட்டிகளில் காண முடிந்தது. பேட்டிங் யூனிட்டிற்கு வலிமைக்கு நேர் எதிராக, ஐதராபாத்தின் பந்துவீச்சு மோசமாக உள்ளது. பேட் கம்மின்ஸ் - புவனேஷ்வர் குமார் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களே ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். தமிழக வீரர் நடராஜன் மட்டுமே கட்டுக்கோப்பாக பந்துவீசி வருகிறார். தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாததும், அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. எனவே இன்றைய போட்டியில் வெல்ல, ஐதராபாத் அணி பந்துவீச்சில் கூடுதல் செலுத்த வேண்டியுள்ளது.
ராஜஸ்தான் Vs ஐதராபாத் நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் ராஜாஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 10 முறையும், ராஜஸ்தான் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணி ஐதராபாத்திற்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 220 ரன்களையும், குறைந்தபட்சமாக 102 ரன்களையும் சேர்த்துள்ளது. ஐதராபாத் அணி ராஜஸ்தானிற்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 217 ரன்களையும், குறைந்தபட்சமாக 127 ரன்களையும் சேர்த்துள்ளது. இரு அணிகளும் பிளே-ஆஃப் வரலாற்றில் இதுவரை ஒருமுறை மட்டுமே மோதியுள்ளன. அதன்படி, 2013ம் ஆண்டு நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், ஐதராபாத் அணியை ராஜஸ்தான் அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
சேப்பாக்கம் மைதானம் எப்படி?
சென்னை சேப்பாக்கம் மைதானம் இரட்டை தன்மை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கக் கூடிய இந்த மைதானம், நடப்பாண்டில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் அதிகப்படியான ரன்கள் குவிக்கப்பட வேண்டியுள்ளது. ஐதராபாத் வெற்றி பெற அஷ்வின் மற்றும் சாஹலின் சவாலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நடப்பு தொடரில் அந்த மைதானத்தில் நடைபெற்ற 7 போட்டிகளில், 5 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.
உத்தேச அணி விவரங்கள்:
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஸ்காந்த், டி நடராஜன்
ராஜஸ்தான்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -