SRH vs RR LIVE Score: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி!
IPL 2024 SRH vs RR LIVE Score Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
கடைசி வரை த்ரிலாக நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
19 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் அணி 189 ரன்கள் எடுத்துள்ளது.
பேட் கம்மின்ஸ் வீசிய 19 வது ஓவரில் துருவ் ஜூரல் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
18 ஓவர்கள் முடிந்த நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
தன்னுடைய 100 வது டி 20 விக்கெட்டை கைப்பற்றினார் நடராஜன். இவரது பந்தில் ஷிம்ரோன் ஹெட்மியர் விக்கெட் ஆகி வெளியேறினார்.
17 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த ரியான் பராக் விக்கெட்டை பறிகொடுத்தார்.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.
யஜஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்கள் எடுத்து நடராஜன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.
ரியான் பராக் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 55 ரன்கள் எடுத்து அரைசதம் பதிவு செய்துள்ளார்.
30 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என 52 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் அரைசததை பதிவு செய்துள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.
ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்துள்ளது.
50 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
202 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் முதல் ஓவரில் தங்களது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினர். இந்த ஓவரை புவனேஷவர்குமார் வீசினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
19 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 182 ரன்கள் எடுத்துள்ளது.
17 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 162 ரன்கள் எடுத்துள்ளது.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் 146 ரன்கள் எடுத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
நிதிஷ் ரெட்டி 30 பந்துகளில் அரைசதம் விளாசி உள்ளார்.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 131 ரன்கள் எடுத்துள்ளது.
ஆவேஷ் கான் வீசிய 15 வது ஓவரின் 4 பந்தில் ட்ராவிஸ் ஹெட் போல்ட் ஆகி வெளியேறினார்.
14 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை சேர்த்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
ட்ராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 50 ரன்கள் எடுத்து அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
11 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்கள் முடிந்தநிலையில் 44 ரன்கள் எடுத்துள்ளது சன்ரைசர்ஸ் அணி.
ராஜஸ்தான் அணி பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா 6 வது ஓவரை சிறப்பாக வீசியுள்ளார். அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த ஐ.பி.எல் சீசனில் இரண்டாவது போட்டியில் களம் இறங்கிய அன்மோல்பிரீத் சிங் 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டானார்.
5 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 35 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அபிஷேக் சர்மா 10 பந்துகள் களத்தில் நின்று 12 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
3 ஓவர்கள் முடிவின் படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்துள்ளது.
2 ஓவர்கள் முடிந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.
ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி அசத்தாலாக பேட்டிங் செய்து வருகின்றனர்.
முதல் ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் பந்திலேயே ட்ராவிஸ் ஹெட்டின் கேட்சை கோட்டை விட்டுள்ளார் ரியான் பராக்.
டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, அன்மோல்பிரீத் சிங், ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர் ), நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், டி நடராஜன்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா
Background
ஐ.பி.எல் சீசன் 17:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 49 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் - ஹைதராபாத் மோதல்:
ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்விகண்டு, 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், நடப்பு தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக ராஜஸ்தான் இருக்கும்.
ஹைதராபாத் அணியோ 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், நடப்பு தொடரில் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் ஹைதராபாத் அணி இன்று களமிறங்குகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது ஹைதராபாத் அணிக்கு முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. அதோடு டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென், மார்க்ரம் என பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஃபார்மில் உள்ளனர். அதேநேரம், கடைசி இரண்டு போட்டிகளிலும் மேற்குறிப்பிடப்பட்ட வீரர்கள் ரன்களை குவிக்க தவறினர். அதோடு, சேஸிங் என்பது அந்த அணிக்கு பிரச்னையாகவே தொடர்கிறது. பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினாலும், மறுபுறம் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் அதிகப்படியான ரன்களை விட்டுக் கொடுத்து வருகின்றனர். மறுபுறம் ராஜஸ்தான் அணியில் பட்லர், ஜெய்ஷ்வால், சாம்சன் மற்றும் ரியன் பராக் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் போல்ட், சந்திப் சர்மா, சாஹல் மற்றும் அஷ்வின் ஆகியோர் எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கின்றனர்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 18 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 9 முறை வெற்றி பெற்றுள்ளன. ஐதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 202 ரன்களையும், குறைந்தபட்சமாக 102 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 217 ரன்களையும், குறைந்தபட்சமாக 127 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்)
டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, அன்மோல்பிரீத் சிங், ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர் ), நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், டி நடராஜன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -