MI vs KKR LIVE Score: சொந்த மண்ணில் தோல்வியடைந்த மும்பை; ப்ளேஆஃப் வாய்ப்பையும் இழந்து வேதனை!

IPL 2024 MI Vs KKR LIVE Score Updates: மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 03 May 2024 11:34 PM
MI vs KKR LIVE Score: 12 ஆண்டுகளுக்குப் பிறகு...

கொல்கத்தா அணி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் வான்கடேவில் மும்பைக்கு எதிராக வெற்றியை பதிவு செய்துள்ளது. 

MI vs KKR LIVE Score: 4 விக்கெட்டுகளை அறுவடை செய்த மிட்ஷெல் ஸ்டார்க்!

கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் 3.5 ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளி நடப்புத் தொடரில் தனது சிறந்த பந்து வீச்சினை வெளிப்படுத்தினார். 

MI vs KKR LIVE Score: சொந்த மண்ணில் தோல்வியடைந்த மும்பை; ப்ளேஆஃப் வாய்ப்பையும் இழந்து வேதனை!

மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் மும்பை அணி தனது ப்ளேஆஃப் வாய்ப்பினையும் இழந்தது. 

MI vs KKR LIVE Score: 9வது விக்கெட்டினை இழந்த மும்பை!

ப்யூஸ் சாவ்லா தனது விக்கெட்டினை தான் எதிர்கொண்ட முதல் பந்தில் இழந்து வெளியேறினார். மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 18.3 ஓவரில் 144 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs KKR LIVE Score: டிம் டேவிட் அவுட்!

மும்பை அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டிம் டேவிட் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 20 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

MI vs KKR LIVE Score: கடைசி இரண்டு ஓவர்கள்!

கடைசி இரண்டு ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs KKR LIVE Score: சிக்ஸர் விளாசிய கோட்ஸீ!

ஆட்டத்தின் 18வது ஓவரின் 5வது பந்தினை கோட்ஸீ சிக்ஸருக்கு விளாசி அணிக்கு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். 

MI vs KKR LIVE Score: நெருங்கிய மும்பையின் நம்பிக்கை - சூர்யகுமார் யாதவ் அவுட்!

பொறுப்பாகவும் சிறப்பாகவும் விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 16வது ஓவரில் ரஸலிடம் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 35 பந்தில் 56 ரன்கள் சேர்த்தார். 

MI vs KKR LIVE Score: 15 ஓவர்கள் முடிவில்!

15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் மீதமுள்ள 5 ஓவர்களில் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்படுகின்றது. 

MI vs KKR LIVE Score: 20 ரன்களை வாரிக் கொடுத்த வைபவ் ஆரோவ்!

ஆட்டத்தின் 14வது ஓவரினை வீசிய வைபவ் ஆரோவ் அந்த ஓவரில் ஒரு நோ-பால் மற்றும் ஃப்ரீ -ஹிட்டுடன் சேர்த்து மூன்று பவுண்டரி ஒரு சிக்ஸர் என 20 ரன்களை வாரிக்கொடுத்தார். 

MI vs KKR LIVE Score: அரைசதம் எட்டிய சூர்யகுமார் யாதவ்!

பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் தனது அரைசதத்தினை விளாசினார். இவர் 5 பவுண்டரியும் இரண்டு சிக்ஸரும் விளாசியுள்ளார். 

MI vs KKR LIVE Score: 100 ரன்களை எட்டிய மும்பை!

13.4 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றது. 

MI vs KKR LIVE Score: ஆட்டத்தை மெல்ல மெல்ல மாற்ற முயற்சிக்கும் சூர்யகுமார் யாதவ்!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் கடந்த சில ஓவர்களாக பவுண்டரிகளை  விளாசி வருகின்றார். இதனால் ஆட்டத்தில் மும்பை அணியின் ஸ்கோரும் சீராக உயர்ந்து வருகின்றது. 

MI vs KKR LIVE Score: 90களில் மும்பை!

13 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs KKR LIVE Score: கெத்து காட்டும் கொல்கத்தா!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி சிறப்பாக பந்து வீசி வருகின்றது. 

MI vs KKR LIVE Score: மும்பை கேப்டன் அவுட்!

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டினை 12வது ஓவரின் இரண்டாவது பந்தில் இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை ரஸல் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 3 பந்துகளில் ஒரு ரன் எடுத்தார். 

MI vs KKR LIVE Score: நேஹல் வதேரா அவுட்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேஹல் வதேரா 11 பந்தில் 6 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இவரது விக்கெட்டினை சுனில் நரைன் கைப்பற்றினார். 10.5 ஓவர்கள் முடிவில் மும்பை 70 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs KKR LIVE Score: பாதி ஆட்டம் முடிந்தது!

10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் சேர்த்துள்ளது. அடுத்த 10 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 103 ரன்கள் தேவைப்படுகின்றது. 

MI vs KKR LIVE Score: திலக் வர்மா அவுட்!

9வது ஓவரின் 4வது பந்தில் மும்பை அணியின் நம்பிக்கை நாயகர்களில் ஒருவரான திலக் வர்மா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 6 பந்தில் 4 ரன்கள் சேர்த்தார். இவரது விக்கெட்டினை வருண் சக்ரவர்த்தி கைப்பற்றினார். 

MI vs KKR LIVE Score: தத்தளிக்கும் மும்பை; பந்து வீச்சில் பதிலடி கொடுக்கும் கொல்கத்தா!

பவர்ப்ளே முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs KKR LIVE Score: சுனில் நரைனிடம் 10வது முறையாக தனது விக்கெட்டினை இழந்த ரோகித்!

ரோகித் சர்மா சுனில் நரைனுக்கு எதிராக இதுவரை 10 முறை தனது விக்கெட்டினை இழந்துள்ளார். சுனில் நரைனுக்கு எதிராக ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட்டும் சுமாராகத்தான் உள்ளது. 

MI vs KKR LIVE Score: ரோகித் சர்மா அவுட்!

பவர்ப்ளேவின் கடைசி ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 12 பந்தில் 11 ரன்கள் சேர்த்தார். இவரது விக்கெட்டினை சுனில் நரைன் கைப்பற்றினார். 

MI vs KKR LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது.!

5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் சேர்த்து நிதானமாக இலக்கைத் துரத்தி வருகின்றது. 

MI vs KKR LIVE Score: நமன் தீர் அவுட் - இரண்டாவது விக்கெட்டினை இழந்த மும்பை!

5வது ஓவரின் முதல் பந்தில் நமன் தீர் தனது விக்கெட்டினை இழந்தார். இந்த விக்கெட்டினை தனது முதல் ஓவரை வீச வந்துள்ள வருண் சக்ரவர்த்தி கைப்பற்றினார். 

MI vs KKR LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

இலக்கை நிதானமாக துரத்திவரும் மும்பை அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 38 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs KKR LIVE Score: சிக்ஸர் கணக்கை தொடங்கிய ரோகித் சர்மா!

ரோகித் சர்மா 4வது ஓவரின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டி அசத்தினார். 

MI vs KKR LIVE Score: சீராக உயரும் மும்பையின் ஸ்கோர்!

மும்பை இந்தியன்ஸ் அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 25 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs KKR LIVE Score: இஷான் கிஷன் க்ளீன் போல்ட் - மிரட்டிவிட்ட மிட்ஷெல் ஸ்டார்க்

அதிரடியாக பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசிய இஷான் கிஷன் அடுத்த பந்தில் தனது விக்கெட்டினை க்ளீன் போல்ட் முறையில் இழந்தார். இவரது விக்கெட்டினை மிட்ஷெல் ஸ்டார்க் கைப்பற்றினார். 

MI vs KKR LIVE Score: இலக்கைத் துரத்த களமிறங்கிய மும்பை!

கொல்கத்தா அணி நிர்ணயம் செய்த 170 என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியுள்ளது. மும்பை அணியின் இன்னிங்ஸை ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் தொடங்கினர். முதல் ஓவர் முடிவில் 6 ரன்கள் சேர்த்தது. 

MI vs KKR LIVE Score: 170 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

MI vs KKR LIVE Score: 19 ஓவர்கள் முடிந்தது!

19 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.

MI vs KKR LIVE Score: மிட்செல் ஸ்டார்க் அவுட்!

மிட்செல் ஸ்டார்க் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். 

MI vs KKR LIVE Score: ரமன்தீப் அவுட்!

கொல்கத்தா அணி வீரர் ரமன் தீப் சிங் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

MI vs KKR LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 156 ரன்கள் எடுத்துள்ளது.

MI vs KKR LIVE Score: ரஸல் ரன் அவுட்!

கொல்கத்தா வீரர் ரஸல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

MI vs KKR LIVE Score: மணீஸ் பாண்டே அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த மணீஸ் பாண்டே 42 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

MI vs KKR LIVE Score: 16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 133 ரன்கள் எடுத்துள்ளது.

MI vs KKR LIVE Score: வெங்கடேஸ் ஐயர் அரைசதம்!

36 பந்துகளில் அரைசதம் எடுத்துள்ளார் வெங்கடேஸ் ஐயர்.

MI vs KKR LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 128 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

MI vs KKR LIVE Score: 14 ஓவர்கள் முடிந்தது!

14 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

MI vs KKR LIVE Score: 13 ஓவர்கள் முடிந்தது!

13 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.

MI vs KKR LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது!

12 வது ஓவர் முடிவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.

MI vs KKR LIVE Score: 11 ஓவர்கள் முடிந்தது!

11 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.

MI vs KKR LIVE Score: ரிங்கு சிங் அவுட் - வந்தார் வென்றார் ப்யூஷ் சாவ்லா!

7வது ஓவரின் முதல் பந்தில் ரிங்கு சிங் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். ப்யூஸ் சாவ்லா இந்த ஓவரை வீசினார். 

MI vs KKR LIVE Score: முடிந்தது பவர்ப்ளே!

பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டிகளை இழந்து 57 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs KKR LIVE Score: 50 ரன்களை எட்டிய கொல்கத்தா!

5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs KKR LIVE Score: மிரட்டிவிட்ட ஹர்திக் பாண்டியா - க்ளீன் போல்ட் ஆன சுனில் நரைன்!

ஆட்டத்தின் 5வது ஓவரின் இரண்டாவது பந்தில் சுனில் நரைன் தனது விக்கெட்டினை க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். 

MI vs KKR LIVE Score: ஹர்திக் பாண்டியாவை சிக்ஸருடன் வரவேற்ற சுனில் நரைன்!

ஆட்டத்தின் 5வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவை அவர் வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் சுனில் நரைன். 

MI vs KKR LIVE Score: இந்த ஆட்டத்தில் இதுவரை துசாரா!

மொத்தம் இரண்டு ஓவர்கள் வீசியுள்ள துசாரா 25 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தாலும், மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி வருகின்றார். 

MI vs KKR LIVE Score: மூன்றாவது விக்கெட்டினையும் கைப்பற்றிய துசாரா!

மூன்றாவது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினையும் துசாரா கைப்பற்றினார். 

விக்கெட்டுகளை சொல்லி எடுக்கும் மும்பையின் துசாரா; வான்கடேவில் வதைபடும் கொல்கத்தா!

மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ரிகுவன்ஷி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை துசாரா கைப்பற்றினார். இவர் இதுவரை இந்த ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

MI vs KKR LIVE Score: கெத்து காட்டிய பும்ரா!

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசிய பும்ரா அதில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 16 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs KKR LIVE Score: முதல் ஓவர் முடிந்தது!

முதல் ஓவர் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 14 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs KKR LIVE Score: முதல் விக்கெட்டினை இழந்த கொல்கத்தா - பிலிப் சால்ட் அவுட்!

ஆட்டத்தின் நான்காவது பந்தை தூக்கி அடிக்க முயற்சி செய்த பிலிப் சால்ட் திலக் வர்மாவிடம் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இந்த ஓவரை துசாரா வீசினார். 

MI vs KKR LIVE Score: முதல் பவுண்டரி!

ஆட்டத்தின் முதல் ஓவரின் மூன்றாவது பந்தினை பிலிப் சால்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 

MI vs KKR LIVE Score: களமிறங்கிய கொல்கத்தா!

கொல்கத்தா அணி மும்பை அணிக்கு எதிராக  தனது பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது. 

MI vs KKR LIVE Score: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி

MI vs KKR LIVE Score: மும்பை இந்தியன்ஸ் அணி!

மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா

MI vs KKR LIVE Score: டாஸ் வென்ற மும்பை!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. மும்பை அணி தனது சொந்த மைதானத்தில் களமிறங்குகின்றது. 

Background

MI Vs KKR, IPL 2024: கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 50 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற உள்ள அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது. இதனால், இனி நடைபெற உள்ள ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு அணிக்கும் மிக முக்கியமானது. அந்த வகையில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.


மும்பை - கொல்கத்தா மோதல்:


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. கொல்கத்தா அணி  இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், நடப்பு தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.


மும்பை அணியோ 10 போட்டிகளில் விளையாடி வெறும் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் அந்த அணி தோல்வியே கண்டுள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும், மும்பை அணி தோல்வியையே சந்தித்துள்ளது. மீதமுள்ள 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது மும்பை அணிக்கு முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சில லீக் போட்டிகளிலேயே மும்பை அணி இந்த முறை படுதோல்விகளை பதிவு செய்துள்ளது.  ரோகித் சர்மா கடந்த 3 போட்டிகளிலும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து சொதப்பியுள்ளார். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர். பந்துவீச்சிலும் பும்ராவை தவிர மற்ற விரர்கள் ரன்களை வாரிக் கொடுப்பது, மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடுகளும் தொடர்ந்து விமர்சனத்திற்குட்பட்டு வருகின்றன. மறுமுனையில் கொல்கத்தா அணியில் சுனில் நரைன், சால்ட், ரஸ்ஸல், ஸ்ரேயாஸ் அய்யர் என பேட்ஸ்மேன்கள் அதிரடி ஃபார்மில் உள்ளனர். இருப்பினும் பந்துவீச்சில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன, ஸ்டார்க் கொல்கத்தா அணிக்காக இதுவரை எந்த மேஜிக்கையும் நிகழ்த்தவில்லை. 


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 32 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன.  மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 232 ரன்களையும், குறைந்தபட்சமாக 67 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 210 ரன்களையும், குறைந்தபட்சமாக 108 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


வான்கடே மைதானம் எப்படி?


மும்பை வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களால் விரும்பப்படும் மைதானங்களில் ஒன்றாகும். இந்த மேற்பரப்பில் ரன்கள் எளிதாகக் கிடைக்கும். இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் சூழல் பெரிதும் மாறுபடாது. பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் மேலும் எளிதாக இருக்கும். எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும்.


உத்தேச அணி விவரங்கள்:


மும்பை: இஷான் கிஷன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரிட் பும்ரா


கொல்கத்தா: பில் சால்ட் , சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், ரின்கு சிங், ராமன்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.