SRH vs LSG Match Highlights: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி இமாயலய வெற்றி பெற்றது. 


நடப்பு ஐபிஎல் தொடரின் 57 வது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதிக்கொண்டது. இதில் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்தது. அடுத்த களமிறங்கிய ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழக்காமல் 9.4 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 


ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடியது மட்டும் இல்லாமல், இலக்கை எட்டும் வரை தங்களது விக்கெட்டினை இழக்காமல் இருந்தனர். ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே அடித்து விளாசியதால் லக்னோ அணி வீரர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 


அபிஷேக் சர்மா 28 பந்தில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் விளாசி 75 ரன்கள் சேர்த்திருந்தார். டிராவிஸ் ஹெட் 30 பந்துகளை எதிர்கொண்டு அதில் 8 பவுண்டரி 8 சிக்ஸர் விளாசி 89 ரன்கள் குவித்திருந்தார். இதில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியிருந்தார். ஏற்கனவே அபிஷேக் சர்மா 16 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 






இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து நான்வாது இடத்திற்கு சரிந்துள்ளது.