IPL 2024 Stats: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பந்துவீச்சை காட்டிலும் பேட்டிங்கில் பல அபரிவிதமான சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் 2024:
பரபரப்பான போட்டிகளுக்கு பெயர் போன ஐபிஎல் தொடர், நடப்பாண்டிலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் 10 அணிகளுடன் தொடங்கி, 70 லீக் போட்டிகள் 2 தகுதிச்சுற்று போட்டிகள், ஒரு எலிமினேட்டர் மற்றும் ஃபைனல் என மொத்தல் 74 போட்டிகள் நடைபெற்றன. வழக்கமாக காணப்படும் அதிரடி பேட்டிங்கை காட்டிலும் நடப்பு தொடரில் பேட்ஸ்மேன்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் ஏராளமான புதுப்புது சாதனைகள் படைக்கப்பட்டன. பல போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் மிக மோசமான சாதனைகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அந்த வகையில், அரங்கேறிய சுவாரஸ்யமான சம்பவங்களும், முக்கியமான வரலாற்று சாதனைகளும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் 2024 சுவாரஸ்யமான நிகழ்வுகளும், சாதனைகளும்:
- ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட சீசன் - 41 முறை
- ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட சீசன் - 8 முறை
- ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற பெங்களூருவின் (263/5) சாதனையை, ஐதராபாத் அணி முறியடித்து 287/3 ரன்களை குவித்தது
- ஒரு போட்டியில் இரு அணிகளும் (ஐதராபாத் Vs மும்பை, மார்ச் 27) சேர்ந்து முதன்முறையாக 500 ரன்களை சேர்த்தன, என்ற சுவாரஸ்யமான சம்பவமும் ஐபிஎல் 2024 தொடரில் தான் அரங்கேறியது
- முதல் 9 போட்டிகளிலும் உள்ளூர் மைதானங்களில் விளையாடிய அணிகளே, வெற்றி பெற்ற சுவாரஸ்ய சம்பவமும் நடப்பாண்டு தொடரில் தான் அரங்கேறியது
- ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்சர்கள் பதிவானது நடப்பு தொடரில் தான் - 1260
- முந்தைய எந்தவொரு சீசனிலும் எந்தவொரு அணியும் 150 சிக்சர்களை அடித்ததில்லை. ஆனால், ஐபிஎல் 2024 தொடரில் முதன்முறையாக ஐதராபாத் அணி 178 சிக்சர்களையும், பெங்களூர் 165 சிக்சர்களையும் பதிவு செய்தன
- ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா - பஞ்சாப் இடையேயான போட்டியில் 42 சிக்சர்கள் விளாசப்பட்டன. ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
- கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை எட்டிப்பிடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச சேஸிங் என்ற சாதனையை பஞ்சாப் நிகழ்தியது
- ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் சேர்க்கப்பட்ட குறைவான ரன்கள் (113/10)என்ற மோசமான சாதனையை ஐதராபாத் படைத்தது
- ஐபிஎல் வரலாற்றில் பிளே-ஆஃப் சுற்றில் அதிக பந்துகளை (57 பந்துகள்) மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி, என்ற சாதனையை இறுதிப்போட்டியில் கொல்கத்தா படைத்துள்ளது
- பேட்ஸ்மேன்கள் பெரும்பாலான பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்த போது, ஜஸ்பிரித் பும்ரா மட்டுமெ அபாரமாக செயல்பட்டு 13 போட்டிகளில் 149 டாட் பால்களை வீசியுள்ளார்
- நடப்பு தொடரில் வெறும் 6.48 என்ற எகானமியுடன் சிறந்த பந்துவீச்சாளராகவும் பும்ரா திகழ்ந்தார்
- லீக் சுற்றில் முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்ற நிலையில், மீதமிருந்த 6 போட்டிகளிலும் வென்று பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஐபிஎல் வரலாற்றில் இது ஒரு சிறந்த கம்பேக் ஆக கருதப்படுகிறது