RR vs PBKS LIVE Score: இறுதிவரை போராடிய ராஜஸ்தான்; அட்டகாசமாக வெற்றியை எட்டிய பஞ்சாப்!

IPL 2024 RR vs PBKS LIVE Score Updates: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

RR Vs PBKS, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடர் 2024:

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 64 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. நேற்றைய போட்டியின் முடிவை தொடர்ந்து, ராஜ்ஸ்தான் இரண்டாவது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

ராஜஸ்தான் - பஞ்சாப் மோதல்:

கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ராஜஸ்தான் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 8 வெற்றிகளுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் அந்த அணி தோல்வியுற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வென்று வெற்றிப்பாதைக்கு திரும்புவதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் நீடிப்பதை உறுதி செய்யவும் முனைப்பு காட்டி வருகிறது. மறுமுனையில் பஞ்சாப் அணி ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றி பெறவும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதை தவிர்க்கும் நோக்கிலும் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

பலம், பலவீனங்கள்:

உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது பஞ்சாப் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மோசமான பேட்டிங் காரணமாகவே அந்த அணி தோல்வியுற்றது. பேர்ஸ்டோ, சஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் மட்டுமே அந்த அணிக்காக ரன் சேர்க்கின்றனர். மற்ற வீரர்களும் திறம்பட செயல்பட்டால் மட்டுமே, இன்றைய போட்டியில் வெற்றி பெற முடியும். ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியுற்று இருப்பது, வீரர்களை மனதளவில் சோர்வடைய செய்துள்ளது. ஜோஸ் பட்லர் அணியிலிருந்து விலகி இருப்பது பின்னடைவாக கருதப்படுகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னதாகவே சில வெற்றிகளை ஈட்டி, வலுவான கம்பேக் கொடுக்க சஞ்சு சாம்சன், ஜெய்ஷ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் கூடுதலாக உழைக்க வேண்டியுள்ளது. பந்துவீச்சில் போல்ட், அவேஷ் கான், அஷ்வின் மற்றும் சாஹல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 16 முறையும், பஞ்சாப் அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 223 ரன்களையும், குறைந்தபட்சமாக 124 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 226 ரன்களையும், குறைந்தபட்சமாக 112 ரன்களையும் பதிவு செய்துள்ளது. 

கவுகாத்தி மைதானம் எப்படி?

கவுகாத்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். எனவே, அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது, வெற்றிக்கு உதவும் என கருதப்படுகிறது.

உத்தேச அணி விவரங்கள்:

ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷுபம் துபே, ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்

பஞ்சாப்: ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ்,சஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, சாம் கரன், அசுதோஷ் சர்மா, கிறிஸ் வோக்ஸ், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

Continues below advertisement
23:23 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!

இறுதிவரை களத்தில் இருந்த சாம் கரன் 41 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசி 63 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார். மேலும் சாம் கரன் பந்து வீச்சிலும் 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

23:19 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: இறுதிவரை போராடிய ராஜஸ்தான்; அட்டகாசமாக வெற்றியை எட்டிய பஞ்சாப்!

பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

23:10 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: 15 ரன்கள் எடுத்தால் வெற்றி!

பஞ்சாப் அணி 12 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்தால் வெற்றியை தனதாக்கும். பஞ்சாப் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்துள்ளது. 

23:08 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் - அரைசதம்!

சாம் கரன் 38 பந்துகளை எதிர்கொண்டு தனது அரைசதத்தினை எட்டி அசத்தி, அணிக்கு நம்பிக்கை அளித்து வருகின்றார். 

22:49 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: 100 ரன்களைக் கடந்த பஞ்சாப்!

14.3 ஓவர்கள் முடிவொல் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

22:29 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: இலக்கைத் துரத்த திண்றும் பஞ்சாப்!

10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

22:11 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: தட்டுத்தடுமாறும் பஞ்சாப்; பவுலிங்கில் கலக்கும் ராஜஸ்தான்!

பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் சேர்த்து தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது. 

21:26 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: ஊதா நிற தொப்பியைக் கைப்பற்றிய ஹர்சல் பட்டேல்!

13 போட்டிகளில் விளையாடி மொத்தம் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்சல் பட்டேல் ஊதா நிறத்தொப்பியை தன்வசப்படுத்தினார். 

21:24 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: பந்து வீச்சில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்!

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரியான் ப்ராக் 48 ரன்கள் சேர்த்தார். 

21:11 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: ஏமாற்றிய இம்பேக்ட் ப்ளேயர் - டொனோவன் ஃபெராரியா அவுட்!

ஆட்டத்தின் 18வது ஓவரில் டொனோவன் ஃபெரோரியா தனது விக்கெட்டினை சிக்ஸர் விளாச முயற்சி செய்து இழந்து வெளியேறினார். 

21:04 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: 17 ரன்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

20:57 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: 16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

20:52 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

20:48 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: ரோமன் பவுல் அவுட்!

ராஜஸ்தான் அணியின் ரோமன் பவுல் தனது விக்கெட்டினை தனது விக்கெட்டினை 15வது ஓவரில் இழந்து வெளியேறினார். இவர் 4 பந்தில் 5 ரன்கள் சேர்த்திருந்தார். இவரது விக்கெட்டினை ராகுல் சஹர் கைப்பற்றினார். 

20:46 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: 100 ரன்களை எட்டிய ராஜஸ்தான்!

14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

20:43 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: துருவ் ஜுரேல் டக் அவுட்!

துருவ் ஜுரேல் தான் சந்தித்த முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை சாம் கரன் கைப்பற்றினார். 

20:38 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: அஸ்வின் அவுட்!

13வது ஓவரின் கடைசி பந்தில் அஸ்வின் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார். அஸ்வின் 19 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். 

20:35 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: 90 ரன்களில் ராஜஸ்தான்!

12.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

20:27 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: 11 ஓவர்கள் முடிந்தது!

11 ஓவர்கள் முடிந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது ராஜஸ்தான் அணி.

20:05 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: ராஜஸ்தான் கேப்டன் அவுட்!

15 பந்தில் 18 ரன்கள் சேர்த்து தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டினை எல்லீஸ் வீசிய 7வது ஓவரில் இழந்து வெளியேறினார். 

20:03 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 38 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

19:56 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 34 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

19:47 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: மூன்று ஓவர்கள்!

மூன்று ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 21 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

19:36 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: முதல் ஓவர் முடிந்தது!

முதல் ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 9 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

19:34 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: ராஜஸ்தானுக்கு ஷாக்! ஜெய்ஸ்வால் அவுட்; கெத்து காட்டிய சாம்கரன்!

ஆட்டத்தின் முதல் ஓவரின் 4வது பந்தில் ஜெய்ஸ்வால் இன்சைடு எட்ஜ் மூலம் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை சாம் கரன் கைப்பற்றினார். 

19:31 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: முதல் பந்தே பவுண்டரி!

ஆட்டத்தின் முதல் பந்தினை ஜெய்ஸ்வால் பவுண்டரிக்கு விரட்டி அசத்தியுள்ளார். 

19:14 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோலர்-காட்மோர், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்

19:12 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: பஞ்சாப் அணி!

பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), சாம் குர்ரன்(கேட்ச்), ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

19:06 PM (IST)  •  15 May 2024

RR vs PBKS LIVE Score: டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்; RR பலத்திற்கு ஈடுகொடுக்குமா பஞ்சாப்?

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.